"மொதல்ல இத Delete பண்ணுங்கப்பா".. ரசிகர் கேட்ட கேள்வி.. தினேஷ் கார்த்திக் கொடுத்த வைரல் ரியாக்ஷன்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரராக இருப்பவர் தினேஷ் கார்த்திக். தமிழக வீரரான இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அட்டகாசமாக ஆடியிருந்தார்.

"மொதல்ல இத Delete பண்ணுங்கப்பா".. ரசிகர் கேட்ட கேள்வி.. தினேஷ் கார்த்திக் கொடுத்த வைரல் ரியாக்ஷன்!!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | 72 பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு இதுதான் காரணமா?.. விசாரணைக்குழு வெளியிட்ட பகீர் தகவல்..!

இதன் காரணமாக சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு தினேஷ் கார்த்திக்கிற்கு கிடைத்திருந்தது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்காக தினேஷ் கார்த்திக் தேர்வாகி இருந்தார். இதற்கடுத்து தற்போது அவர் மீண்டும் இந்திய அணியில் அதிகம் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், நாளை (09.02.2023) ஆரம்பமாகவுள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராகவும் தினேஷ் கார்த்திக் பணிபுரிய உள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதற்கு முன்பும் 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணிபுரிந்திருந்தார்.

Dinesh karthik reply to fan on twitter about world cup innings

Images are subject to © copyright to their respective owners.

அப்படி இருக்கையில் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார் தினேஷ் கார்த்திக். அப்போது, ரசிகர்கள் பலரும் பல விதமான கேள்விகளையும் எழுப்ப, அனைத்திற்கும் பதிலளித்திருந்தார் தினேஷ் கார்த்திக்.

Dinesh karthik reply to fan on twitter about world cup innings

Images are subject to © copyright to their respective owners.

அப்போது ரசிகர் ஒருவர், 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி இருந்த ஸ்கோர் போர்டின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, "உங்களின் இன்னிங்ஸ் குறித்து ஒரு வார்த்தை கூறுங்கள்" என ஜாலியாக குறிப்பிட்டிருந்தார். இதனை கவனித்த தினேஷ் கார்த்திக், "இதை இப்போதே டெலிட் செய்யுங்கள்" என சற்று கலகலப்பாகவும் பதில் கூறியிருந்தார்.

Dinesh karthik reply to fan on twitter about world cup innings

Images are subject to © copyright to their respective owners.

நியூசிலாந்து அணிக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு நடந்த அரை இறுதி போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தன. இதன் பின்னர் ஆட வந்த தினேஷ் கார்த்திக், பவர்பிளே ஓவர்களுக்குள் சற்று நிதானமாகவே ஆடவும் செய்திருந்தார். விக்கெட்டுகள் ஒரு பக்கம் அதிகமாக சென்ற காரணத்தினால், மெல்ல மெல்ல ரன் சேர்க்கவும் முயற்சித்த சூழலில் அவர் அவுட்டாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | 16 வருஷம் தலைமறைவு.. PIZZA செய்யும் வேலை பார்த்துவந்து மாஃபியா கும்பல் தலைவன்.. சிக்கியது எப்படி..? சினிமாவை மிஞ்சும் சம்பவம்..!

CRICKET, DINESH KARTHIK

மற்ற செய்திகள்