"எப்படி கணக்கு கரெக்ட்டா இருக்குதா?".. முதல் நாளிலேயே சரியா சொன்ன தினேஷ் கார்த்திக்.. "அப்படியே நடந்திருக்கு பா"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அமர்க்களமாக நடந்து முடிந்துள்ளது.

"எப்படி கணக்கு கரெக்ட்டா இருக்குதா?".. முதல் நாளிலேயே சரியா சொன்ன தினேஷ் கார்த்திக்.. "அப்படியே நடந்திருக்கு பா"

                             Images are subject to © copyright to their respective owners

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இதற்கு முன்பு இரண்டு முறை நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் வைத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி முதல் போட்டியும் முடிவுக்கு வந்துள்ளது. இரண்டரை நாளில் நடந்து முடிந்த இந்த போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சால் ரன் அடிக்க முடியாமலும் ஆஸ்திரேலியா அணி தடுமாறி இருந்தது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது. 5 மாதங்கள் கழித்து கம்பேக் கொடுத்த ஜடேஜா, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடி இருந்த இந்திய அணி, 400 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் ஷர்மா 120 ரன்கள் எடுத்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners

223 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, மளமளவென விக்கெட்டுகளை இழக்க, 91 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார். இதனால், இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கவும் செய்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த இந்திய கிரிக்கெட் அணி, இரண்டரை நாளிலேயே டெஸ்ட் போட்டியை முடித்து வைத்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் முதல் நாளிலேயே கணித்த விஷயம் நடந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners

இந்த தொடரில் வர்ணனையாளராக இருக்கும் தினேஷ் கார்த்திக், போட்டியின் முதல் நாளில் இந்த போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் தான் பேட்டிங் செய்யும் என தான் நினைப்பதாக கூறி இருந்தார். இதற்கு வர்ணனையில் பதில் பேசி இருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் மார்க் வாக், நீங்கள் கூறியது நடக்கிறதா என்று பார்ப்போம் என்றும் சொல்லி இருந்தார். இப்படி இருவரது உரையாடலும் நீண்டு கொண்டே போனது.

Images are subject to © copyright to their respective owners

ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஒருவரிடம் தினேஷ் கார்த்திக் ஜாலியாக சவால் விடுவது போன்றும் இது அமைந்திருந்தது. அப்படி இருக்கையில், தற்போது தினேஷ் கார்த்திக் கூறியது போல, இந்திய அணி ஒரு இன்னிங்சில் தான் இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கும் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது கணிப்பு சரியானதாக தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டரில் மார்க் வாக்கை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார். இதற்கு சிறந்த கணிப்பு என மார்க் வாக் பாராட்டி அடுத்த போட்டியிலும் இதை தொடர்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

DINESHKARTHIK, IND VS AUS

மற்ற செய்திகள்