'செட் ஆகுறதுக்கு 2 பால் எடுத்துக்கிட்டாப்புல...' 'அதுக்கப்புறம் ஒவ்வொண்ணும் சரவெடி...' - அடிச்சு நொறுக்கி தள்ளிய வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டாலும் நேற்றைய ஐபில் தொடரில் தன் பலம் என்ன என்பதை நிரூபித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன்னாகவும் விக்கெட் கிப்பராகவும் இருக்கிறார். இருப்பின்னும் இந்திய அணியில் செய்யப்படும் தொடர் புறக்கணிப்புகளால் அவரால் நிலையான ஒரு தொடரில் விளையாடவும், தனது முழு திறமையையும் வெளிக்காட்டவும் முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபில் தொடரில் தினேஷ் கார்த்திக் தனது தரமான பினிஷிங் மூலம் தன் எதிர்பாளர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ரன் குவித்தது.
முக்கியமாக ராணா, ராகுல் இருவரும் அரை சதம் அடித்து கொல்கத்தா அணிக்கு மிக சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
அதன்பின் மிடில் ஆர்டரில் பார்த்தால் கொல்கத்தா அணி கொஞ்சம் திணறியது. ராணா, ராகுல் அவுட் ஆன பின் ரன் செல்வது குறைந்தது. முக்கியமாக ரசல், இயான் மோர்கன் வந்த வேகத்தில் அவுட் ஆனார்கள். இதனால் மிடில் ஓவர்களில் ரன் செல்வது வேகமாக குறைந்தது. அதன்காரணமாக கொல்கத்தா அணி பின் தங்கும் நிலைக்கு சென்றது.
இவர்களுக்கு அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் கொல்கத்தாவிற்காக முதல் இன்னிங்க்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தார். முதல் 2 பந்துகளை செட் ஆவதற்கு எடுத்துக்கொண்ட தினேஷ் கார்த்திக் அதன்பின் அதிரடி காட்டினார். நேற்று 9 பந்துகளை தான் தினேஷ் கார்த்திக் ஆடியிருந்தாலும், அந்த 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
அதில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர். இவரின் ஸ்டிரைக் ரேட் நேற்று 244.44. சையது முஷ்டாக் கோப்பையில் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் அந்த பார்மை ஐபிஎல் போட்டிகளிலும் தக்க வைத்துள்ளார். நேற்று கொல்கத்தாவை சரிவில் இருந்து மீட்டு 187 ரன்களுக்கு கொண்டு சென்றது இவரின் பினிஷிங்தான்.
தினேஷ் கார்த்திக் எதிர்கொண்ட பந்துகள் எல்லாம் யக்காரில் பெயர்போன நடராஜன், புவனேஷ்வர் குமார் பந்துகள். அதுவும் சென்னை பிட்சில் இப்படி அடிப்பது எல்லாம் ரொம்ப கஷ்டம். ஆனால் தினேஷ் கார்த்திக் நேற்று அசால்டாக ஆடி ஆட்டத்தை போக்கையே மாற்றினார்.
இவரின் கடைசி நேர ரன்கள் தான் ஹைதராபாத்திற்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது. நேற்றைய போட்டியின் மூலம் இந்திய அணியில் தன்னை புறக்கணிக்கும் கோலிக்கும் தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகக் கோப்பை தொடருக்கு பின் தினேஷ் கார்த்திக்கை கோலி எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்