எப்போவுமே நம்ம பேட் பிடிக்காது...! ஆனா, மத்தவங்க வச்சிருக்க 'பேட்'ட பார்க்குறப்போ... 'அடுத்த வீட்ல உள்ள...' - கமெண்டரியில் தினேஷ் கார்த்திக் சர்ச்சை பேச்சு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் தொலைக்காட்சியில் செய்த வர்ணனை காரணமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி 2-வது ஒருநாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது
அதோடு இந்தக் கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக வர்ணனையாளராகப் பங்குபெற்றார்.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக், இந்தியாவுக்காக 26 டெஸ்டுகள், 94 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தற்போது அவர் அவர் பேட் குறித்து கூறிய உதாரணம் தற்போது சமூகவலைத்தளங்களில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.
2-வது ஒருநாள் ஆட்டத்தின் வர்ணனையின்போது பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட் பற்றி வர்ணனையாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது தினேஷ் கார்த்திக்கோ, 'பேட்ஸ்மேன்களுக்கு எப்போதுமே தாங்கள் பயன்படுத்தும் பேட்கள் மீது அதிருப்தி இருக்கும்.
அவர்களுக்கு தாங்கள் பயன்படுத்தும் பேட்கள் பிடிக்காது. ஆனால் அடுத்த பேட்ஸ்மேன்களின் பேட்களைப் பிடிக்கும். பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல. அவர்கள் எப்போதும் நன்றாக இருப்பது போல இருக்கும்' எனக் கூறியுள்ளார்.
தினேஷ் கார்த்திக்கின் இந்த பேச்சால் சமூகவலைத்தளங்களில் பலர் அவரை விமர்சித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்