'சேவாக்', 'கில்க்றிஸ்ட்' கிட்ட இருந்த அதே 'ஃபயர்'.. 'பையன்' ஆடுறத பாத்தாலே.. எதிர் 'டீம்'க்கு பயம் வந்துரும்.." புகழ்ந்து தள்ளிய 'தினேஷ் கார்த்திக்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக, இந்திய அணி வீரர்கள் நேற்று இங்கிலாந்து கிளம்பிச் சென்றனர்.

'சேவாக்', 'கில்க்றிஸ்ட்' கிட்ட இருந்த அதே 'ஃபயர்'.. 'பையன்' ஆடுறத பாத்தாலே.. எதிர் 'டீம்'க்கு பயம் வந்துரும்.." புகழ்ந்து தள்ளிய 'தினேஷ் கார்த்திக்'!!

இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் விளங்கும் நிலையில், முதல் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்ற இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை.

அதிலும் குறிப்பாக, இந்திய அணி சமீப காலத்தில் வெளிநாட்டு மைதானங்களிலும் மிக அற்புதமாக ஆடி வருகிறது. இந்திய அணியிலுள்ள சீனியர் வீரர்கள் எந்த அளவுக்கு சிறப்பாக ஆடுகிறார்களோ, அதே அளவுக்கு அணியிலுள்ள இளம் வீரர்களும், அனுபவம் வாய்ந்தவர்களைப் போல ஆடி வருகிறார்கள். கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, இளம் வீரர்கள் அதிகம் பேர் உதவியுடன், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி, வரலாறு படைத்திருந்தது.

இதன் காரணமாக, வரவிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும், இந்திய அணியிலுள்ள இளம் வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik), இளம் வீரர் ஒருவரை பாராட்டி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

'இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் மற்றும் நம்பிக்கை பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் (Rishabh Pant) உள்ளார். இதனால், இந்திய அணியில் அதிகமாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலரைச் சேர்க்க அவரது பங்கு உதவுகிறது.

அதிலும், அவரது பேட்டிங்கில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால், அது எதிரணியினருக்கு அச்சத்தை ஏற்படுவது. சேவாக் மற்றும் கில்க்றிஸ்ட் ஆகியோர், எதிரணி மீது காட்டும் அதே ஆட்டத்தைத் தான் பண்ட்டும் வெளிப்படுத்துகிறார்.

ரிஷப் பண்ட்டிற்கு பக்கபலமாக விக்கெட் கீப்பர் விரித்திமான் சஹா அணியில் உள்ளார். சஹா, உலகின் தலை சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர். அவர், பண்ட்டிற்கு எப்படி வேண்டுமானாலும் உதவ தயாராக உள்ளார்' என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்