‘என் அம்மாவும், மனைவியும் கடுமையாக திட்டினாங்க’.. ‘நான் அப்படி பேசுனது தப்புதான்’.. மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாலியல் ரீதியான சர்ச்சை பேச்சுக்கு இந்திய அணியின் முன்னணி வீரர் தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர் தினேஷ் கார்த்திக் Sky Sports சேனல் சார்பில் வர்ணனையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போது தினேஷ் கார்த்திக், பெண்கள் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில், ‘பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தங்களின் பேட்டை எப்போதும் விரும்பவதி்ல்லை. ஏனென்றால் அது அவர்களுடனே இருக்கும். ஆனால், மற்ற வீரர்கள் பயன்படுத்திய பேட்டைத்தான் பேட்ஸ்மேன்கள் அதிகமாக விரும்புவார்கள். பேட் என்பது அடுத்தவர் மனைவி போல, அதனால் அதுதான் சிறந்ததாக இருக்கும்’ என தினேஷ் கார்த்திக் பேசியிருந்தார்.
தினேஷ் கார்த்திக்கின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. பெண்கள் குறித்து தினேஷ் கார்த்திக் பேசிய கமெண்ட்டுக்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. அப்போது வர்ணனை செய்த தினேஷ் கார்த்திக், பெண்கள் குறித்த தனது கமெண்ட்டுக்கு மன்னிப்பு கேட்டார். அதில், ‘2-வது ஒருநாள் போட்டியின்போது நான் பேசிய பேச்சுக்கு இப்போது அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அப்படி பேசவில்லை.
ஆனால், அவ்வாறு பேசியது தவறுதான். ஒவ்வொருவரிடமும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நிச்சயமாக அந்த வார்த்தை சரியானது அல்ல. இதுபோல் மறுபடியும் நடக்காது. நான் இப்படி பேசியதற்காக என் மனைவியும், அம்மாவும் கடுமையாக திட்டினர்’ என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்