பிரபல தமிழ் பாட்டுக்கு.. சுனில் கவாஸ்கருடன் சேர்ந்து டான்ஸ் போட்ட தினேஷ் கார்த்திக்.. "இப்டி வித்தியாசமா இருக்கே!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாகவும் இருப்பவர் தினேஷ் கார்த்திக். இவர் கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை என்றாலும், 2022 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சிறப்பாக ஆடி இருந்த தினேஷ் கார்த்திக், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

பிரபல தமிழ் பாட்டுக்கு.. சுனில் கவாஸ்கருடன் சேர்ந்து டான்ஸ் போட்ட தினேஷ் கார்த்திக்.. "இப்டி வித்தியாசமா இருக்கே!!"

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | அப்புறம் என்னப்பா கப் நமக்கு தான்னு அறிவிச்சிடலாமா?.. பிராவோ-வின் மாஸ் என்ட்ரி.. வீடியோ..!

2022 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தினேஷ் கார்த்திக், இந்த தொடருக்கு பிறகு தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் வர்ணனையில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி இருந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கூட தினேஷ் கார்த்திக் வர்ணனையில் ஈடுபட்டிருந்தது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவரவும் செய்திருந்தது. இதற்கு காரணம், மிக நுட்பமாக கிரிக்கெட் தொடர்பாக பல்வேறு விஷயங்களை வர்ணனையில் பேசியிருந்த தினேஷ் கார்த்திக், நிறைய இடங்களில் கலகலப்பாகவும் பேச்சை வெளிப்படுத்தி இருந்தார். அது மட்டுமில்லாமல், போட்டியின் போக்கை வைத்து ஒரு சில விஷயங்களை முன்னரே சரியாக தினேஷ் கார்த்திக் கணித்திருந்தது கூட பெரிய அளவில் பார்வையாளர்களின் கவனம் பெற்றிருந்தது.

Dinesh karthik and sunil gavaskar dance for tum tum song video viral

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கருடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் நடனமாடியுள்ளது தொடர்பான வீடியோ பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .

தமிழில் ஆர்யா மற்றும் விஷால் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி இருந்த சூழலில், எஸ் தமன் இசையமைத்திருந்தார். மேலும் அவரது இசையில் டும் டும் என்ற பாடல், பெரிய அளவில் டிரெண்டாகவும் அந்த சமயத்தில் மாறி இருந்தது.

Dinesh karthik and sunil gavaskar dance for tum tum song video viral

Images are subject to © copyright to their respective owners.

அப்படி இருக்கையில் கடந்த சில தினங்களாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என சமூக வலைத்தளத்தின் எந்த பக்கத்தை திறந்தாலும் டும் டும் பாடலின் ரீல்ஸ் வீடியோக்களை எக்கச்சக்கமாக வலம் வருவதை நாம் கவனித்திருப்போம். அந்த வகையில் தற்போது தினேஷ் கார்த்திக் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் இந்த டும் டும் பாட்டிற்கு மிக வித்தியாசமாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதாவது வழக்கமான நடன ஸ்டெப்ஸ்களை போடாமல், கிரிக்கெட்டில் பேட்டிங் செய்வது போன்று ஷாட்களை அடித்து அதனை ஒரு நடனம் போல வடிவமைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர். வழக்கமான டும் டும் ரிலீஸ் வீடியோ போல இல்லாமல், கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு இருக்கும் இந்த ரிலீஸ் வீடியோ தற்போது ரசிகர்களின் லைக்குகளையும் அள்ளி வருகிறது.

Also Read | "இந்தியா அந்த மேட்ச்ல தோற்க என் வீடியோ தான் காரணமா?".. கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்.. அஸ்வின் கொடுத்த பதிலடி!!

CRICKET, DINESH KARTHIK, SUNIL GAVASKAR, DINESH KARTHIK AND SUNIL GAVASKAR DANCE, TUM TUM SONG

மற்ற செய்திகள்