டி20 உலக கோப்பை : "Startingல அஸ்வின் நல்லா ஆடுனாரு, ஆனா".. "சாஹல் ஆடி இருக்கலாம்".. லிஸ்ட் போட்ட தினேஷ் கார்த்திக்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் வைத்து நடைபெற உள்ளது.
Also Read | 2023 ல கெளம்பி.. 2022-ல் விமானம் தரை இறங்கியதா?.. பயணிகளுக்கு காத்திருந்த வினோத சம்பவம்!!
முதலாவதாக டி20 தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து 03.01.2023 அன்று நடக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாவும் ஒரு நாள் தொடருக்கு ரோகித் சர்மாவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக வங்காளதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடி இருந்தது. இதில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்திருந்தது. இதற்கடுத்து நடந்த டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது இந்திய அணி. இதன் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றவும் உதவி இருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் செயல்பாடு குறித்து தினேஷ் கார்த்திக் தற்போது சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி இருந்தது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்த போதிலும் அரை இறுதி சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது.
டி 20 உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில், அஸ்வின் செயல்பாடு குறித்து பேசி உள்ள தினேஷ் கார்த்திக், "அணியின் தேர்வு என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள், வீரர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பொறுத்து அமைவதாகும். எளிமையாக சொல்லப் போனால் இந்திய அணியில் அஸ்வின் டி 20 உலக கோப்பைத் தொடரின் ஆரம்ப கட்டத்தில் சிறப்பாக விளையாடினார். ஆனால் முடிவில் இவருடைய ஆட்டம் நன்றாக அமையவில்லை. ஆனால் சாஹல் விளையாடி இருந்தால் நிச்சயம் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். மேலும் சாஹல் நிச்சயம் இந்திய அணியின் சுவாரஸ்யமான தேர்வாகவும் இருந்திருப்பார். அதே வேளையில் இந்த விஷயங்கள் எல்லாம் தொடர் முடிந்த பிறகு தான் நமக்கு தெரிய வருகிறது" என தெரிவித்துள்ளார்
Also Read | சிக்ஸ் லைன் உள்ள கேட்ச்?.. அவுட்டா சிக்ஸரா என குழம்பிய ரசிகர்கள்.. உண்மையில் நடந்தது என்ன??
மற்ற செய்திகள்