விராட் கோலி பேச்சை கேட்காத 2 பேர்.. தினேஷ் கார்த்திக் உடைத்த உண்மை

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் 2019 உலகக் கோப்பையில் இருந்து அணியில் நிரந்தரமற்ற நிலையில் உள்ளனர்.

விராட் கோலி பேச்சை கேட்காத 2 பேர்.. தினேஷ் கார்த்திக் உடைத்த உண்மை

2017 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, இந்தியாவின் ஒயிட்-பால் அணி, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களாக கொண்டு வந்தனர். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் இணைந்து வேட்டையாடி பல பேட்டிங் வரிசையை ஒன்றன் பின் ஒன்றாக துன்புறுத்தினர். இவர்களின் புத்திசாலித்தனம் இவர்களுக்கு 'குல்-சா' என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்தது. இருப்பினும், இருவரும் 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு அதிர்ச்சியூட்டும் சரிவைச் சந்தித்தனர் மற்றும் விளையாடும் XI இல் நிரந்தர இடத்தையும் இழந்தனர்.

dinesh karthik about chahal kuldeep virat kohli ms dhoni

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் தேர்வுக்குழு ஜடேஜா மற்றும் அஷ்வினிடம் மீண்டும் திரும்பியதில், குல்தீப், சாஹல் இருவரில் யாரும் அணியில் இடம்பெறவில்லை. இரு வீரர்களுடனும் டிரஸ்ஸிங் அறையை பகிர்ந்து கொண்ட மூத்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், இருவரின் வீழ்ச்சியை பற்றி பேசியுள்ளார். ஸ்டம்புகளுக்குப் பின்னால் MS தோனி இல்லாதது அவர்களின் சரிவுக்குப் பின்னால் முக்கியப் பங்கு வகித்ததாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

சாம்பார் மூலமாக கணவனை கொலை செய்ய மனைவியின் மாஸ்டர் பிளான்.. வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ள அதிர்ச்சி உண்மை

dinesh karthik about chahal kuldeep virat kohli ms dhoni

"100 சதவீதம். தோனி போன்ற ஒருவர் நிச்சயமாக இல்லாததால் அவர்களின் பந்துவீச்சின் திறன் குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் அவர்களுக்கு எவ்வளவு உதவி செய்தார் என்பதை நான் பார்த்திருக்கிறேன். விக்கெட் விழும் போது அவர்களுக்கு உதவி தேவையில்லை, ஆனால் யாராவது ஒரு வீரர் ஸ்லாக்-ஸ்வீப்பை அடித்தால் அல்லது ரிவர்ஸ் ஸ்வீப்பை விளையாடினால், இவ்வளவு அனுபவமுள்ள தோனி போல ஒரு மனிதரிடமிருந்து புத்திசாலித்தனமான ஐடியாக்கள் குல்தீப், சாஹலுக்கு முக்கியமானது.

dinesh karthik about chahal kuldeep virat kohli ms dhoni

குல்தீப் மற்றும் யாதவ் சம்பந்தப்பட்ட பெரும்பாலான ஆட்டங்களில் விராட் கோலி கேப்டனாக இருந்திருக்கலாம். இருப்பினும், இருவரும் தோனியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். விராட் கோலி பல போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கலாம். எந்த லைனில் பந்து வீச வேண்டும், பேட்ஸ்மேன் என்ன நினைக்கிறார், எப்படி பந்தை சுழற்ற வேண்டும். இந்த மூன்று கேள்விகள்தான் அவர்கள் மனதில் சுழன்று கொண்டே இருக்கும். மூன்று கேள்விகளுக்கும், சிறந்த பதிலைக் கொடுப்பவர், சந்தேகத்திற்கு இடமின்றி, MS தோனி தான். அவர் அவர்களை நன்றாக வழிநடத்தினார்,” என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

‘அப்படி போடு’.. ரசிகர்கள் செலக்‌ஷன்.. லக்னோ அணிக்கு பெயர் என்ன தெரியுமா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

dinesh karthik about chahal kuldeep virat kohli ms dhoni

DINESH KARTHIK, CHAHAL KULDEEP, VIRAT KOHLI, MS DHONI, தினேஷ் கார்த்திக்

மற்ற செய்திகள்