"நீங்க என்ன தான் நெனச்சுட்டு இருக்கீங்க??... மத்தவங்களுக்கு எல்லாம் 'திறமை' இல்லியா??..." 'கங்குலி'யை விளாசித் தள்ளிய முன்னாள் 'வீரர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளை விளையாடவுள்ளது.

"நீங்க என்ன தான் நெனச்சுட்டு இருக்கீங்க??... மத்தவங்களுக்கு எல்லாம் 'திறமை' இல்லியா??..." 'கங்குலி'யை விளாசித் தள்ளிய முன்னாள் 'வீரர்'!!!

இதற்கான அணியை பிசிசிஐ தேர்வுக் குழு அறிவித்தது முதல் பல சர்ச்சைகள் 'பிசிசிஐ'யை சுற்றி வலம் வந்த வண்ணம் உள்ளன. பல முன்னாள் வீரர்கள் எந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்துள்ளீர்கள் என்ற கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.

பிசிசிஐ தொடர்பான அனைத்து சர்ச்சைகளுக்கும் அதன் தலைவர் கங்குலியே தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், அணியின் தேர்வாளர்கள் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் ஏன் தலைவரான கங்குலி மட்டும் விளக்கமளித்து வருகிறார் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்க்கார் குற்றஞ்சாட்டியுள்ளார். அணியின் தேர்வாளர்களை கங்குலி குறைவாக மதிப்பிடுகிறாரா அல்லது அவருக்கு தான் எல்லாம் தெரியும் என நினைத்துக் கொள்கிறாரா என்ற கேள்வியையும் திலீப் கங்குலி முன் வைத்துள்ளார்.

அணியில் காயம் காரணமாக ரோஹித் ஷர்மா இடம்பெறாமல் போன நிலையில், அவர் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறுவது குறித்து அவரது காயத்தை கருத்தில் கொண்டு யோசிக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன் கங்குலி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய திலீப், 'தலைமை தேர்வாளர் சுனில் ஜோஷி மற்றும் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் ஆகியோரை தங்களது நிலைப்பாடுகள் குறித்து பேச விடாமல் கங்குலி கருத்து கூறி வருகிறார். அவர்களுக்கு போதிய திறமை இல்லையா?. பிசிசிஐ பிசியோ (physio) ரோஹித் ஷர்மா ஃபிட்டாக இல்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஐபிஎல் பிசியோ அவரை விளையாட அனுமதி கொடுத்துள்ளது. இதில் ஏன் இந்த முரண்பாடு?' என கேள்விகளை அடுக்கியுள்ளார் திலீப் வெங்சர்க்கார்.

மற்ற செய்திகள்