Annaathae others us
Jai been others

ஏன் அஸ்வினை விளையாட விடாம பண்றீங்க...? ப்ளீஸ், அது 'என்ன'ன்னு கொஞ்சம் விசாரிங்க...! - பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்த முன்னாள் கேப்டன்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் அஸ்வினை ஏன் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஏன் அஸ்வினை விளையாட விடாம பண்றீங்க...? ப்ளீஸ், அது 'என்ன'ன்னு கொஞ்சம் விசாரிங்க...! - பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்த முன்னாள் கேப்டன்...!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஸ்வின். சென்னையை பூர்விகமாக கொண்ட அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய பந்து வீச்சாளராக கருத்தப்படுபவர். இதுவரை 600 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

dilip vengsarkar has questioned why Ashwin to be ignored

இந்நிலையில், கடந்த பல கிரிக்கெட் விளையாட்டு தொடரில் அஸ்வின் இந்திய அணி சார்பாக விளையாடவில்லை. இந்திய அணியில் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் விளையாடினார். அதன்பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அஸ்வின் தேர்வு செய்யப்பட்டும் கடைசிவரை 4 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

dilip vengsarkar has questioned why Ashwin to be ignored

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் அஸ்வினை பங்குகொள்ள வைக்காதத்தை குறித்து பி.சி.சி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என விமர்ச்சித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்பட்டன் தன் ட்விட்டரில் பக்கத்தில், 'அஸ்வினுடன் கேப்டன் கோலிக்கு அப்படி என்ன கடினமான உறவு இருக்கிறது. இந்திய அணியிலிருந்து அஸ்வின் ஒதுக்கி வைக்கப்பட எப்படி அனுமதிக்கப்படுகிறார். கேப்டனுக்கு இவ்வாறு சர்வாதிகாரம் அனுமதிக்கப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா' என பதிவிட்டுள்ளார். அப்போதே இந்த ட்வீட் சலசலப்பை ஏற்படுத்தியது.

dilip vengsarkar has questioned why Ashwin to be ignored

இந்நிலையில். இப்போது முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கும் போது, 'அஸ்வின் இந்திய அணியில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர் வீரர், இதுவரை 600 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வினை ஏன் தேர்வு செய்ய மறுக்கிறீர்கள். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து பி.சி.சி.ஐ விசாரணை நடத்த வேண்டும். இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் 4 போட்டிகளிலும் அஸ்வினைத் தேர்வு செய்யவில்லை, ஆனால் இப்போது நடக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டியில்  அஸ்வினை அணியில் சேர்த்துள்ளனர். இது எப்படி என தெரியவில்லை.

இப்போது பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி அடுத்தடுத்து தோல்வி அடைந்தபின், வீரர்கள் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். என் நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய வீரர்களிடம் இதுபோன்ற சோர்வான உடல் மொழியை பார்த்ததில்லை. பந்துவீச்சாக இருக்கட்டும், பேட்டிங்காக இருக்கட்டும் வீரர்கள் ஆர்வமில்லாமல் இருப்பது போல தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

DILIP VENGSARKAR, ASHWIN

மற்ற செய்திகள்