"'கோலி' எடத்துல நான் இருந்துருந்தா... கண்டிப்பா அப்டி ஒரு முடிவை எடுத்துருக்க மாட்டேன்..." 'இந்திய' கேப்டனை சரமாரியாக விமர்சித்த முன்னாள் 'வீரர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது.

"'கோலி' எடத்துல நான் இருந்துருந்தா... கண்டிப்பா அப்டி ஒரு முடிவை எடுத்துருக்க மாட்டேன்..." 'இந்திய' கேப்டனை சரமாரியாக விமர்சித்த முன்னாள் 'வீரர்'!!!

இந்தியாவின் பேட்டிங் கடுமையான விமர்சனத்துக்குள்ளான நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி தனக்கு குழந்தை பிறக்கப் போவதையொட்டி அவர் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இந்தியா திரும்பவுள்ளார். கிரிக்கெட் போட்டியை விட தனது குடும்பத்தை கருத்தில் கொண்டு கோலி எடுத்துள்ள இந்த முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அதே வேளையில் இனியுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அணியில் இல்லாதது அணிக்கு நிச்சயம் பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதால் கோலியின் முடிவை பலர் எதிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் தோஷி, கோலியின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

'தனக்கு குழந்தை பிறக்கவுள்ளதையொட்டி கோலி தற்போது இந்தியாவிற்கு திரும்புள்ள முடிவை நிச்சயம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நம் முன்னால் தேசிய கடமை உள்ள போது, கோலி இடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் நான் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டேன். என்னை பொறுத்தவரையில் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமை தான் அனைத்திற்கும் முன்னால் இருக்க வேண்டும்.

இந்திய அணிக்கு தலைமை தாங்குவது என்பது தான் எனது உள்ளத்தில் முதலிடத்தில் இருப்பது. அது மட்டுமில்லாமல் இத்தகைய கடினமான சூழ்நிலையில் தான், ஒரு அணி கேப்டனை நாடும். ஆனால், அப்படி ஒரு நிலையில், நீங்கள் அணியை துணை கேப்டனிடம் கொடுத்து விட்டு செல்வது என்பது பல கேள்விகளுக்கு விடையைத் தெரிவிக்காமல் செல்வது போன்றதாகும்.

கோலியை இந்திய அணி ஒரு கேப்டனாக தவற விடுவதை விட, நிச்சயம் ஒரு பேட்ஸ்மேனாக தான் அவரை இழக்கும். அவர் களத்தில் உள்ளது அவருடன் பேட்டிங் செய்யும் மற்ற வீரர்களுக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்' என திலீப் தோஷி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்