இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு... சைலண்டாக ஸ்கெட்ச் போடும் ஹர்பஜன்!.. டி20 உலகக்கோப்பை... அணிக்குள் அரசியல் ஆரம்பம்!?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி இளம் வீரர்கள் ப்ரித்வி ஷா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஆட்டத்தை பார்த்து ஹர்பஜன் சிங் கூறிய கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு... சைலண்டாக ஸ்கெட்ச் போடும் ஹர்பஜன்!.. டி20 உலகக்கோப்பை... அணிக்குள் அரசியல் ஆரம்பம்!?

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 262 ரன்களை எடுத்தது. அதையடுத்து விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்து 36 ஆவது ஓவரிலேயே வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதற்கிடையே, இந்திய அணியின் இளம் வீரர்களான ப்ரித்வி ஷா மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் செய்து இலங்கை அணியை மிரள வைத்தனர்.

ப்ரித்வி ஷா தன் இஷ்டத்துக்கு பவுண்டரிகளாக அடித்து நொறுக்க, இஷான் கிஷன் தன் அறிமுகப் போட்டியின் முதல் பந்தையே சிக்சரில் தொடங்கினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். இத்தகைய அச்சமற்ற கிரிக்கெட் ஆட்டம் பலரையும் கவர்ந்துள்ளது.

எனவே, எமிரேட்சில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியில் இவர்கள் இருவரும் இடம்பெற்றே ஆக வேண்டும் என ஹர்பஜன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள அவர், "வீரர்களின் ஆட்டத்தை வைத்தே அவர்கள் மதிப்பிடப் படவேண்டும். ஒரு சர்வதேச போட்டியில் இவர்கள் இருவரும் ஆடிய விதம், இவர்களை டி20 உலகக்கோப்பையில் எப்படி புறக்கணிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமா? இத்தகைய வீரர்கள் அணியிலிருப்பது அவசியம். இவர்கள் எதிரணியில் யார் வீசுகிறார்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. தங்களுக்கு வரும் இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடுகின்றனர்.

இவர்களுக்காக மூத்த வீரர்களை நீக்க வேண்டிய நிலை வந்தாலும், தேர்வாளர்கள் பயப்படக் கூடாது. அவர்கள் இந்த வீரர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, சூர்யகுமார் யாதவ்வும் தன் இடத்தை டி20 உலகக்கோப்பையில் உறுதிப்படுத்தியுள்ளார். அட்டாக், டிஃபென்ஸ் என இரண்டுமே சூர்யாவுக்கு வருகிறது" என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்