ஐசிசி கப்பா...? ஏங்க, அவரு இன்னும் 'ஐபிஎல்' மேட்ச்லையே 'கப்' அடிக்கல...! - கோலியை கலாய்த்து தள்ளிய 'சிஸ்கே' வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சூடான மற்றும் திறமையான இளமை உத்வேகம் கொண்ட ஆட்டநாயகனாக புகழப்படுபவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
பல நாட்களாக விராட் கோலி குறித்து அரசல்புரசலாக பல விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்திய டெஸ்ட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக 33 வெற்றிகளுடன் கோலி தொடர்கிறார். ஆனால், இதுவரை ஐசிசி சார்பில் நடத்தப்படும் ஒரு கோப்பையைக் கூட கோலி தலைமையில் இந்திய அணி வென்றதில்லை. 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பின்ஸ் டிராபி, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என அனைத்திலும் இறுதிவரை சென்றும் கோலியால் கோப்பையை வென்றுதர முடியவில்லை என பலர் அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலியை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், 'விராட் கோலி நம்பர் ஒன் கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. அவர் கிரிக்கெட் தொடரில் நிகழ்த்திய சாதனையின் மூலம் இதை நாம் உணர்ந்து கொள்ளலாம். உலக கிரிக்கெட்டிலும் விராட் கோலி நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், விராட் கோலி தலைமையிலான ஐசிசி கோப்பை பற்றி நீங்கள் கேட்டால் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக் கூட இந்திய அணி வென்றதில்லை. ஐபிஎல் தொடரில்கூட கோலியால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.
நான் நினைப்பது என்னவென்றால், கோலிக்கு இன்னும்கூட சிறிதுகால அவகாசம் கொடுக்கலாம். இப்போது டி-20 உலகக் கோப்பை வருகிறது. அதையடுத்து ஒருநாள் உலகக் கோப்பை வருகிறது. இவை இரண்டிலும் கோலிக்கு வாய்ப்பளித்து பார்க்கலாம். இந்த இரு போட்டிகளிலும் இறுதிப் போட்டியை அடைவது என்பது சாதாரணமானது அல்ல. சில தவறுகள் செய்தாலும் வாய்ப்பை இழந்துவிடுவோம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தமைக்கு காலநிலை ஒரு காரணமல்ல, பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததே காரணமாகும். அணியில் உள்ள மூத்த வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேட் செய்ய வேண்டும்.
காலநிலையை குறைக் கூறுபவர்களுக்கு, இந்திய அணியின் பேட்டிங் சரியில்லை என்று நான் சொல்லுவேன். அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துப் பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும்' என தன் கருத்தை முன்வைத்துள்ளார் ரெய்னா.
மற்ற செய்திகள்