‘நான் அப்படி கேட்டேனா..?’ அவர்கிட்ட நான் பேசக்கூட இல்ல.. ‘பிரபல வீரர் அதிர்ச்சி..’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது இங்கிலாந்து.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது இங்கிலாந்து அணிக்கு நடுவர் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போட்டிக்குப் பிறகு பேசிய இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சன், “பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் சென்று தங்களுக்கு ஓவர் த்ரோ மூலம் கிடைத்த அந்த 4 ரன்கள் தேவையில்லை, அதைத் திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிபிசி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பென் ஸ்டோக்ஸிடம் ஓவர் த்ரோ மூலம் கிடைத்த பவுண்டரியை ஏன் ரத்து செய்ய வேண்டுமெனக் கேட்டீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பென் ஸ்டோக்ஸ், “நான் நடுவரிடம் சென்று ஓவர் த்ரோ பவுண்டரியை ரத்து செய்யக் கோரினேனா? அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நான் அந்த நேரத்தில் என்னைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். நான் எப்படி நடுவரிடம் பேசியிருக்க முடியும்?
பந்து எனது பேட்டில் பட்டு பவுண்டரி சென்றவுடன் நான் என்னுடைய மார்பில் கை வைத்து மன்னிப்பு கோரினேன். நடுவரிடம் சென்று பேசவில்லை. அந்த சமயத்தில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லாதம், கேப்டன் வில்லியம்ஸனிடம் சென்று என்னை மன்னித்து விடுங்கள் என்று தான் கேட்டேன்” எனக் கூறியுள்ளார்.