RRR Others USA

“அவர் இப்படி அடிப்பார்ன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல”.. தொடர் தோல்வி.. நொந்துபோய் ரோகித் சர்மா சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.

“அவர் இப்படி அடிப்பார்ன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல”.. தொடர் தோல்வி.. நொந்துபோய் ரோகித் சர்மா சொன்ன பதில்..!

ஐபிஎல் தொடரில் 14-வது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும், திலக் வர்மா 38 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியை பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்களும் (4 பவுண்டரி 6 சிக்சர்கள்), வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 50 ரன்களும் (6 பவுண்டரி 1 சிக்சர்) அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Did not expect Pat Cummins to come out and play like that: Rohit

இந்த நிலையில் போட்டி முடிந்ததும் தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘பேட் கம்மின்ஸ்ஸிடம் இருந்து இப்படி ஒரு ஆட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. முதல் இன்னிங்ஸை நாங்கள் சரியாக தொடங்கவில்லை. ஆனால் கடைசி 4-5 ஓவர்களில் 70 ரன்களை எடுத்தது எங்கள் பேட்ஸ்மேன்களின் பெரும் முயற்சி தான். அதேபோல் பவுலிங் செய்த போது எங்களின் திட்டப்படி செயல்பட முடியவில்லை. நாங்கள் துவங்கும்போது மைதானம் சற்று மெதுவாக இருந்தது. ஆனால் ஆட்டம் செல்ல, செல்ல விளையாடுவதற்கு ஏதுவாக மைதானம சிறப்பாக அமைந்தது.

வெற்றிபெற எங்களுக்கு தேவையான ரன்கள் இருந்தன. 15-வது ஓவர் வரை வெற்றி எங்கள் பக்கம்தான் இருந்தது. ஏற்கனவே அவர்களுக்கு 5 விக்கெட்டுகள் விழுந்திருந்ததால், தேவையான ரன்களும் எங்களிடம் இருந்ததாகவே நினைத்தேன். சுனில் நரைன்தான் நன்றாக விளையாடக் கூடியவர் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பேட் கம்மின்ஸ் அவர்களுக்கு வெற்றியை தேடி கொடுத்துவிட்டார். இதை ஏற்றுக்கொள்வதற்கு சிறிது கடினமாக இருக்கிறது. நாங்கள் இன்னும் நிறைய முயற்சிகளை கொடுக்க வேண்டும்’ என ரோகித் சர்மா தெரிவித்தார்.

மற்ற செய்திகள்