'களத்தில் குதிக்கும் 'தல'... 'ஆனா இதுமட்டும் பண்ண வேண்டாம் 'தோனி'... ராணுவத்தின் புதிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய ராணுவத்தின் மீதும் ராணுவ வீரர்களின் மீதும் அளவற்ற அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர் தோனி. அதற்கான சான்று ஒரு நாள் போட்டியின் போது ராணுவத்தை மரியாதை செய்யும் விதமாக, இந்திய ராணுவத்தை குறிக்கும் சினத்தை தனது கையுறையில் அணிந்திருந்தார். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்று அங்கிருக்கும் வீரர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம்.

'களத்தில் குதிக்கும் 'தல'... 'ஆனா இதுமட்டும் பண்ண வேண்டாம் 'தோனி'... ராணுவத்தின் புதிய அறிவிப்பு!

இந்நிலையில் இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் தோனி, ராணுவ குழுவுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்ததார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என தோனி கூறியிருந்தார். இதையடுத்து தோனி இந்திய ராணுவத்திடம் அளித்திருந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற, ராணுவ தளபதி பிபின் ராவத், தோனிக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் எந்தவித ராணுவ நடவடிக்கையில் பங்குபெற அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தோனியின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

MSDHONI, BCCI, CRICKET, INDIANMILITARY, INDIAN ARMY, PARAMILITARY REGIMENT, BIPIN RAWAT, ARMY CHIEF GENERAL