"அது எப்படி 'தல' நீங்க சொல்லலாம்??.." 'மேட்ச்' முடிஞ்சதும் 'தோனி' சொன்ன 'அந்த' விஷயம்... கடுப்பான 'ரசிகர்'கள்... "அப்படி என்னத்த சொல்லிட்டாரு??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இனியுள்ள போட்டிகள் அனைத்திலும் வென்றாக வேண்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இன்று களமிறங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

"அது எப்படி 'தல' நீங்க சொல்லலாம்??.." 'மேட்ச்' முடிஞ்சதும் 'தோனி' சொன்ன 'அந்த' விஷயம்... கடுப்பான 'ரசிகர்'கள்... "அப்படி என்னத்த சொல்லிட்டாரு??"

பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்ந்தாலும், ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக கை கோர்த்து 18 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டினர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில் சென்னை அணி ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. 

இந்நிலையில், போட்டிக்கு பின் பேசிய தோனி, 'நாங்கள் சில திட்டங்களை வகுத்தோம். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை என்றே தோன்றுகிறது. அணியிலுள்ள இளம் வீரர்களிடமும் பெரிதாக ஒரு வேகம் தெரியவில்லை. அதனால் தான் இதுவரை அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால் இன்றைய போட்டியின் முடிவு மீதமுள்ள போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் படி அமைந்துள்ளது. அந்த போட்டிகளில் எந்தவித நெருக்கடியும் அவர்கள் ஆடலாம்' என தனது பேச்சில் தோனி குறிப்பிட்டிருந்தார். 

 

தோனியின் இந்த பேச்சை பல கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். காரணம், அணியிலுள்ள இளம் வீரர்களிடம் வேகத்தை காணவில்லை என தோனி கூறியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜாதவ் தொடர்ந்து சிறப்பாக விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக இளம் வீரர் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். 

 

அவர் கிடைத்த ஒரே வாய்ப்பில் சற்று சிறப்பாக ஆடிய போதும் அடுத்த போட்டியில் அவர் அணியில் இடம்பெறவில்லை. அடுத்த 2 போட்டிகளுக்கு பிறகு ஜாதவிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்த நிலையில், ரசிகர்கள் மீண்டும் சென்னை அணியை விமர்சனம் செய்தனர். ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்றைய போட்டியிலும் கடைசியில் களமிறங்கிய ஜாதவ் 7 பந்துகளுக்கு 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

ஜெகதீசன் போன்ற இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளே அளிக்காமல், தொடர் தோல்விகளத் தழுவி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து நிற்கும் நிலையில், இப்போது அவர்களிடையே ஒரு வேகத்தைக் காணவில்லை என தோனி கூறியிருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்