VIDEO: ஏன்மா அழுதிட்டு இருக்கீங்க...? கண்ணீர் விட்டு கதறி அழுத 'குட்டி' ரசிகைக்கு... ஸ்பெஷல் 'கிப்ட்' கொடுத்த தோனி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி சுற்றுக்கு சென்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது நடந்த ஒரு நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறது.

VIDEO: ஏன்மா அழுதிட்டு இருக்கீங்க...? கண்ணீர் விட்டு கதறி அழுத 'குட்டி' ரசிகைக்கு... ஸ்பெஷல் 'கிப்ட்' கொடுத்த தோனி...!

ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் தொடர் முடிய போகும் தருவாயில் இறுதிப் போட்டியில் களமிறங்க போகும் இரண்டு அணிகள் யார் என்ற பதற்றம் ரசிகர்களிடையே ஒட்டிக்கொண்டிருந்தது.

Dhoni's little fan shed tears of joy from his eyes

இதில் நேற்று (10-10-2021) சென்னை மற்றும் டெல்லி அணிகள் இறுதி சுற்றுக்குள் நுழைய போராடி வந்த நிலையில், தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியோடு களத்தில் நின்றது.

Dhoni's little fan shed tears of joy from his eyes

அதுமட்டுமில்லாமல், நேற்றைய ஆட்டத்தில் 'தல' தோனியின் பினிஷ் ஆப் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்து படைக்கும் வகையில் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸின் குட்டி ரசிகை ஒருவருக்கு தோனி கொடுத்த பரிசு அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

Dhoni's little fan shed tears of joy from his eyes

விஷயம் என்னவென்றால் நேற்றைய தொடரில் சென்னை வென்ற பிறகு தோனியின் குட்டி ரசிகை தன் கண்களில் இருந்து தாரை தாரையாக ஆனந்த கண்ணீர் கொட்டியப்படியே மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.

அந்த குட்டி ரசிகையை ஸ்டேடியமில் இருந்த அனைத்து கேமராக்களும் போகஸ் செய்யவே அவரின் மகிழ்ச்சி உலகிற்கே தெரிந்து ஒரு நொடியில் வைரலானார். ஆதுமட்டுமில்லாமல் தன்னுடைய குட்டி ரசிகைக்கு கிரிக்கெட் பந்தில் கையொப்பம் இட்டு அவருக்கு வழங்கினார்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரென்ட்டிங்கில் நம்பர் 1 ஆக உள்ளது.

மேலும், செய்தியாளர் சந்திப்பில் கூறிய தோனி, 'நான் ஒன்றும் அவ்வளவு ஸ்பெஷல் இல்லை. நிறைய போட்டிகளில் நான் என்னுடைய பெஸ்ட்டை தந்ததில்லை. நாம் வலைக்குள் பயிற்சி செய்வதை, கிரிக்கெட் களத்தில் எப்படி பந்துக்கேற்றார் போல அடித்து ஆட வேண்டும்.

அதைதவிர என்னுடைய மனதில் எதுவும் இல்லை. அப்படி இருந்தால் பந்தின் மீது கவனம் வைத்து ஆட முடியாது' எனக் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்