‘தோனி இதை செய்யத் தான் ஆசைப்படுறாரு’... ‘உயரிய விருது பெற்ற’... ‘தோனியின் ஆர்மி நண்பர்’... ‘தமிழக கேப்டன் பகிர்ந்த தகவல்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான கேப்டன் ரஞ்சித் குமாருக்கு, ராணுவத்தின் உயரிய விருதான சேனா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தோனியின் நண்பரானது குறித்து அவர், சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

‘தோனி இதை செய்யத் தான் ஆசைப்படுறாரு’... ‘உயரிய விருது பெற்ற’... ‘தோனியின் ஆர்மி நண்பர்’... ‘தமிழக கேப்டன் பகிர்ந்த தகவல்’!

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது தந்தை அங்குள்ள சைனிக் ராணுவ பள்ளியில் ஊழியர் என்பதால் இயற்கையாகவே, ராணுவத்தின் மீது ஆர்வமும், அந்தப் பள்ளியில் படிப்பதற்கான இடமும் கிடைத்துள்ளது. அங்கு படித்த அவர், தற்போது, காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமெண்ட்டின் 23-வது பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளை ஒழிக்கும் தாக்குதல் திட்டத்தில் சிறந்து விளங்கியதற்காக, தமிழக கேப்டனான ரஞ்சித்குமாருக்கு சேனா விருது தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தானும் நண்பரானது குறித்து ரஞ்சித் குமார் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ‘ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டு, ராணுவத்தில் தோனி பயிற்சி பெற்று வந்தார். அந்த நேரத்தில், பாரா ஜம்பிங்கின்போது நாங்கள் இருவரும் சந்தித்தோம். தோனி நல்ல நண்பர்.

அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மற்றும் வழிகாட்டி போன்று செயல்பட்டவர். என் தந்தை மற்றும் எனது பள்ளிக்குப் பிறகு, தோனி, எனக்கு ஒரு ஊக்கமளிக்கும் நண்பராக, ஆதரவுடன் செயல்பட்டார். என்னைப் பொறுத்தவரையில், தோனி எப்போதும் ராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறார். நான் அவருடன் இருந்தபோது, ஜம்மு-காஷ்மீர் கதைகளை விரும்பிக் கேட்பார்’ என்று கூறியுள்ளார்.

மேலும், தோனியுடன், கேரம் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாடியதையும் நினைவுக் கூர்ந்தார். சிறு வயது முதலே ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று ஆசைப்பட்ட வந்த தோனிக்கு, ராணுவம் பிடித்தமானது என்பது மகிழ்ச்சியே என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

MSDHONI, ARMY, SENA, AWARD, BADGE, FRIEND