'இவரு கேப்டன்ஷிப்ல கோப்பையை ஜெயிச்சிடக் கூடாதுனுதான்.. அவரு இப்படி ஆடுனாரு'.. பிரபல வீரரின் தந்தை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் மோதிய இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதில் நியூஸிலாந்து பந்துவீச்சாளர் குப்தில் செய்த த்ரோ, ஸ்டெம்பில் நேரடியாக அடித்ததால் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதுபற்றி நியூஸ்18 சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ள முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், தோனி வேண்டுமென்றே இந்தியா தோற்பதற்காக நன்றாக விளையாடாமல் விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பேசியவர், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, விளையாண்டபோதும் கூட, தோனி ரன்களை எடுக்கவே முயற்சித்தார். அதே உள்நோக்கத்துடன்தான் அரையிறுதியிலும் விளையாண்டுள்ளார். காரணம், அவரைப் பொருத்தவரை, தன்னைத் தவிர வேறொரு கேப்டனது லீடர்ஷிப்பில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றுவிடக் கூடாது என்பதுதான்’ என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ‘துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாவைப் போல் 77 ரன்கள் எடுத்தாடிக்கொண்டிருக்கும் ஜடேஜாவிடம் போய், அடித்து ஆடுங்கள் என்றும், ஹர்திக் பாண்ட்யாவிடம் சென்று ஸ்பீன்னர்ஸ் ஓவரில் அடித்து ஆடுங்கள் என்றும் சொல்லும் தோனி தனது வாய்ப்புகளை வேண்டுமென்றே பயன்படுத்தாமல் விடுகிறார். இதுபோன்று என்றாவது யுவ்ராஜ் சொல்லியிருக்கிறாரா?’ என்று யோகராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நேரடியாக தோனியைப் பார்த்து கேட்பதுபோல், ‘நீங்கதான் சிக்ஸர்கள் அடித்தெல்லாம் ஆடுவீர்களே? நிறைய ஆடியிருக்கிறீர்களே? அடித்தாட வேண்டியதுதானே? என்ன ஆனது உங்களுக்கு’ என்றும் யோக்ராஜ் சிங் கேட்டுள்ளார்.