Michael Coffee house

"நான் சொல்றத அப்டியே பண்ணு.." இக்கட்டான நேரத்தில் ஜடேஜாவுக்கு 'தோனி' கொடுத்த 'ஐடியா'.. மைக்கில் பதிவான 'ஆடியோ'.. "அதுக்கப்புறம் நடந்ததே வேற!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

"நான் சொல்றத அப்டியே பண்ணு.." இக்கட்டான நேரத்தில் ஜடேஜாவுக்கு 'தோனி' கொடுத்த 'ஐடியா'.. மைக்கில் பதிவான 'ஆடியோ'.. "அதுக்கப்புறம் நடந்ததே வேற!!"

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மும்பை மைதானத்தில், நேற்று சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் மிக அற்புதமாக பந்து வீசினர். இந்த போட்டியில், 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த மொயின் அலி (Moeen Ali), 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும், தனது பங்குக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அது மட்டுமில்லாமல், 4 கேட்ச்களையும் அவர் பிடித்திருந்தார். இதனிடையே, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் (Jos Butler) மட்டும் தனியாளாக நின்று சென்னையை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரை வீழ்த்த அதிரடி திட்டம் ஒன்றை வகுத்தார் தோனி (Dhoni).

10 ஆவது ஓவரை ஜடேஜா வீசிய நிலையில், அந்த ஓவரில் பட்லர் ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனாலும், மீண்டும் 12 ஆவது ஓவரில் ஜடேஜாவையே பந்து வீசச் செய்தார் தோனி. அப்போது, 'பந்து பழையதாகி விட்டது. இதனால், நன்றாக ஸ்பின் ஆகும்' என ஹிந்தியில் தோனி கூறினார். இந்த ஆடியோ மைக்கில் பதிவாகியிருந்தது. பழைய பந்துகளை நன்றாக சுழற்றும் திறன் கொண்ட ஜடேஜா (Jadeja), அந்த ஓவரின் முதல் பந்தையே ஸ்பின் செய்ய, அது சரியாக ஸ்டம்பை பதம் பார்த்தது.

தாங்கள் வகுத்த திட்டம் சரியாக வேலை செய்ததும், தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர், மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். தோனியின் பேட்டிங் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும், அவரது கேப்டன்சியை குறை கூறவே வாய்ப்பில்லாதபடி, தோனி அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

தோனியின் புத்திசாலித்தனத்தை பாராட்டிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar), 'பந்து வீச்சில் தோனி ஏற்படுத்திய மாற்றம், அற்புதமானது. அதற்கு முந்தைய ஓவரில், பட்லர் சிக்ஸ் அடித்ததும், பழசான பந்தைக் கொண்டு மீண்டும் ஜடேஜாவை பந்து வீசச் செய்து, பட்லரை வீழ்த்தினார். அதற்கு அடுத்த ஓவரையும், சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலியைக் கொண்டு வீச வைத்தார் தோனி.

 

தோனியின் கேப்டன்சியால் நான் அதிகம் ஈர்க்கப்பட்டேன். பந்து வீச்சு ரொட்டேஷன், ஃபீல்டர்களை சரியான இடத்தில் நிப்பாட்டியது என தோனி மிகவும் சிறப்பாக செயல்பட்டார்' என சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு, சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார். அதே போல, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராஜியன் ஓஜாவும் (Pragyan Ojha), தோனியைப் பாராட்டி, ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.

 

மற்ற செய்திகள்