ரோஹித் இப்படி அடிப்பார்ன்னு முன்னாடியே ‘கணித்த’ தோனி.. திடீரென வைரலாகும் ‘பழைய’ ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரோஹித் ஷர்மா இரட்டை சதம் அடிப்பார் என முன்பே கணித்த தோனியின் பழைய ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோஹித் இப்படி அடிப்பார்ன்னு முன்னாடியே ‘கணித்த’ தோனி.. திடீரென வைரலாகும் ‘பழைய’ ட்வீட்..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தோனியின் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை, ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளது. ஐசிசி நடத்தும் இந்த மூன்று தொடர்களிலும் கோப்பையை கைப்பற்றிய ஒரே கேப்டன் தோனிதான்.

Dhoni old tweet goes viral, about Rohit's double ton against SL

தோனி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தபோது, அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக பல இளம்வீரர்களை அணியில் விளையாட வைத்தார். மேலும் வீரர்களின் மீது நம்பிக்கை வைத்து பேட்டிங் ஆர்டர்களை அவ்வப்போது மாற்றி வந்தார்.

Dhoni old tweet goes viral, about Rohit's double ton against SL

அந்த வகையில் ஆரம்ப காலத்தில் மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினார். இதனை அடுத்து ரோஹித் ஷர்மா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் திறமை வெளிப்படுத்தினார். இதனால் பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் காரணமாக அமைந்தது.

Dhoni old tweet goes viral, about Rohit's double ton against SL

அந்த வகையில் கடந்த 2014-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, ‘ஒருவேளை ரோஹித் ஷர்மா அவுட்டாகவில்லை என்றால், 250 ரன்களுக்கு மேல் அடிப்பார்’ என தோனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் கூறியதுபோலவே அப்போட்டியில், 173 பந்துகளில் 264 ரன்கள் (33 பவுண்டரி, 9 சிக்சர்) எடுத்து ரோஹித் ஷர்மா உலக சாதனை படைத்தார்.

இதனால் இந்திய அணி 404 ரன்களை குவித்தது. இந்த மெகா இலக்கை துரத்திய இலங்கை அணி 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா இரட்டை சதம் அடிப்பார் என தோனி முன்னமே கணித்த பழைய ட்வீட்டை ரசிகர் ஒருவர் இணையத்தில் பகிர அது தற்போது வைரலாகியுள்ளது.

மற்ற செய்திகள்