‘ஜெயிச்சாலும், தோல்வி அடைஞ்சாலும்’... ‘ஐபிஎல் போட்டியில் இவங்க தான் மாஸ்’... ‘ரசிகர்களை அதிகம் கவர்ந்த அணி எது தெரியுமா?’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டி 13-வது சீசனில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த அணி எது என்பது தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் பெண் ரசிகைகள் அதிகம் இந் தஇரண்டு வீரர்களுக்குத் தான் அதிகம்.

‘ஜெயிச்சாலும், தோல்வி அடைஞ்சாலும்’... ‘ஐபிஎல் போட்டியில் இவங்க தான் மாஸ்’... ‘ரசிகர்களை அதிகம் கவர்ந்த அணி எது தெரியுமா?’...

ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ஐபிஎல் போட்டி நடந்த 8 வார்ங்களில் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. 23 மாநிலங்களில் 3,200 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஐபிஎல்லின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் என்பது அறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் 26.8 மில்லியன் ரசிகர்களை பெற்று சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. மிக குறைவான புள்ளிகளை எடுத்திருந்தாலும் சிஎஸ்கே அணி எடுத்திருந்தாலும், அதனால் அதனது ரசிகர்கள் வட்டம் பாதிக்கவில்லை. அதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் குறைந்த வித்தியாசத்தில் அதாவது 24.8 மில்லியன் ரசிகர்களுடன் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. மூன்றாவது இடத்தில் 13.3 மில்லியன் ரசிகர்களுடன் ஆர்சிபி உள்ளது.

இந்த மூன்று அணிகளும் சேர்ந்து 75 சதவிகித ஐபிஎல் ரசிகர்களை பெற்றுள்ளது. மற்ற 5 அணிகள் இணைந்து மீதமுள்ள 25 சதவிகித ரசிகர்களை பெற்றுள்ளது. மேலும் ஐபிஎல்லில் 64 சதவிகித ஆண்களும், 36 சதவிகித பெண்களும் ரசிகர்களாக உள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Dhoni-led CSK has highest fan following during IPL 2020

தோனி மற்றும் விராட் கோலிக்கு அதிகமான பெண் ரசிகைகள் உள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனாலேயே அந்த அணிகள் அதிகளவில் ரசிகர்களை தக்க வைத்துக்கொண்டுள்ளது. மேலும் ஆண் ரசிகர்களை மட்டுமே வைத்து பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் சிஎஸ்கே முந்தி காணப்படுகிறது. ஆனால் பெண் ரசிகைகளால் சிஎஸ்கே அதிக ரசிகர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.

Dhoni-led CSK has highest fan following during IPL 2020

இதுகுறித்து ஆர்மேக்ஸ் மீடியாவின் நிறுவனர் மற்றும் சிஇஓ சைலேஷ் கபூர் கூறுகையில், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி மூன்று அணிகளும் கடந்த 13 ஆண்டுகளில் தங்களது ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பார்வையாளர்களைத் தவிர, உறுதியான வெற்றியின் நடவடிக்கை மூலம், ஐபிஎல் அணிகள் தங்களது கணிசமான ரசிகர்களை தக்க வைக்க முடியுமா என்பதுதான்.

அப்படி உருவாக்கிவிட்டால், அதன்மூலம், லாபகரமான அணியாக உருவெடுக்க முடிவதற்கான வாய்ப்புகளை தருகிறது என்று கூறியுள்ளார். இவர்களை பார்த்து தங்களது ரசிகர்கள் வட்டத்தை உயர்த்திக் கொள்ள மற்ற அணிகள் திட்டமிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்