'Dhoni is a Word'...'Thala is an Emotion'...'இன்னைக்கு உங்களோட டே'...நெகிழவைத்த 'தோனி'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டி எந்த அளவிற்கு விறுவிறுப்பாக அமைந்ததோ,அந்த அளவிற்கு உணர்வு பூர்வமான ஒன்றாகவும் அமைந்து விட்டது.

'Dhoni is a Word'...'Thala is an Emotion'...'இன்னைக்கு உங்களோட டே'...நெகிழவைத்த 'தோனி'!

ஐபிஎல் தொடரின் 50-வது போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதின.இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால்,80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது.ஆட்ட நாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது.ஓய்வில் இருந்து தோனி நேற்று அணிக்கு திரும்பியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.அவர் மைதானத்திற்கு வந்த போது ரசிகர்களின் உற்சாக கூச்சல் விண்ணை பிளந்தது.

அதிரடியாக தொடங்கிய நேற்றைய ஆட்டம் மிகவும் எமோஷனலாக முடிவுற்றது. ஐபிஎல் விதிமுறைப்படி நடப்புச் சேம்பியன்களின் சொந்த மண்ணில்தான் இறுதிப் போட்டி நடைபெற வேண்டும்.ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் 3 கேலரிகளுக்கு இன்னும் அனுமதி கிடைக்காததால் இந்த வருடம் இறுதிப் போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.அதனால் நேற்றைய ஆட்டம்தான் சென்னையில் நடைபெறும் இறுதி ஆட்டம்.இதற்குப் பிறகு குவாலிஃபயர் 1 போட்டி மட்டுமே சென்னையில் நடக்கவிருக்கிறது.

அதன் காரணமாகவும் நேற்று உழைப்பாளர் தினம் என்பதாலும் போட்டி முடிந்தபின் தோனி மைதானத்தில் இருந்த அனைத்து ஊழியர்களுடனும் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.இது அங்கிருந்த ஊழியர்களை நெகிழச்செய்தது.

MSDHONI, IPL, IPL2019, CHENNAI-SUPER-KINGS, CHEPAUK STADIUM, LABOUR DAY