'எப்பவுமே கேப்டன்னா அவர் தான்'... 'இங்கிலாந்து முன்னாள் கேப்டன்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் மூத்த வீரரான தோனியின் ஓய்வு குறித்து பல வதந்திகள் வந்து கொண்டுள்ளநிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

'எப்பவுமே கேப்டன்னா அவர் தான்'... 'இங்கிலாந்து முன்னாள் கேப்டன்'!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் மைக்கேல் வாகன். வர்ணைனையாளராக இருந்து வரும் அவர், சர்வதேச கிரிக்கெட் குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், சர்வதேச வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், விராட் கோலி போன்ற வீரர்களின் திறமைகளை பாராட்டியுள்ளார். கேப்டன்கள் குறித்த கேள்விக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘மகேந்திர சிங் தோனி, தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், கேப்டன் பொறுப்பில் இல்லை. எனினும், எங்கள் காலத்தில் (white ball) குறைந்த ஓவர் போட்டிகளில், தான் பார்த்தவரையில் தோனி தான் மிகச் சிறந்த கேப்டன். ஏனெனில், அவர் ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று செய்யக்கூடிய உத்திகள், ஆட்டத்தின் போக்கை கணிப்பது ஆகியவற்றில், அவர் மாதிரி யாராலும் அபரிமிதமாக யோசிக்க முடியாது.

அதேபோல் நெருக்கடியான சூழல்களை சிறப்பாக கையாள்வதுடன், பேட்டிங்கில் சிறந்து காணப்பட்டார். புதிய ஐடியாக்களை உபயோகப்படுத்துவதில் சிறப்பானவர்’ எனத் தெரிவித்துள்ளார். கேப்டன் தோனியின் தலைமையில் இந்திய அணி,  கடந்த 2007-ம் ஆண்டு டி20, 2011-ம் ஆண்டு 50 ஓவர், மற்றும் 2013-ல் சாம்பியன் டிராபி உள்ளிட்ட 3 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, MICHAELVAUGHAN, INDIA, ENGLAND, CAPTAIN