“யாமறிந்த கேப்டன்களிலே.. தோனிதான் தி பெஸ்ட்!.. அவரும் இப்ப எங்க டீம்ல”.. வீரர் புகழாரம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வரும் மார்ச் 29- ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி இடம்பெறவுள்ளார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா தோனியை சிறந்த கேப்டன் என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.

“யாமறிந்த கேப்டன்களிலே.. தோனிதான் தி பெஸ்ட்!.. அவரும் இப்ப எங்க டீம்ல”.. வீரர் புகழாரம்!

கடந்த 2019-ஆம் ஆண்டு, கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்ததில் இருந்து, சர்வதேசப் போட்டிகளில் தோனி விளையாடவில்லை. அதன் பிறகு தற்போது வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடவிருக்கிறார்.

இந்நிலையில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் சிறந்தவர் தோனி. அவரால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பல இடங்களில் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அப்பேற்பட்ட இந்திய அணியை மாற்றிய அந்த சிறந்த ஒரு கேப்டன் இப்போது எங்களது அணியில் இருப்பதாக நினைக்கிறேன்’ என்று சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

MSDHONI, SURESHRAINA, IPL2020