"இந்த விஷயத்துல 'தோனி' தான் 'பெஸ்ட்'.. 'மோர்கன்' எல்லாம் சரிபட்டு வரமாட்டாரு.." வேற லெவலில் பாராட்டிய 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய கேப்டன்களில், தவிர்க்க முடியாத ஒருவர் எம்.எஸ். தோனி (MS Dhoni). கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பையில், சீனியர் வீரர்கள் யாருமில்லாத இந்திய அணியை வழிநடத்திய தோனி, வெற்றிகரமாக கோப்பையை வென்று கொடுத்தார்.
அதே போல, 28 ஆண்டுகளுக்கு பிறகு, தோனி தலைமையிலான இந்திய அணி, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரையும் கைப்பற்றி சாதனை புரிந்தது. அது மட்டுமில்லாமல், ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையும் தோனியையே சாரும். ஐபிஎல் தொடரிலும், தனது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் சிறப்பாக அவர் தலைமை தாங்கியுள்ளார்.
இந்நிலையில், ஒரு பந்து வீச்சாளரின் செயல்திறன் எப்படி, கேப்டனின் வலிமையை வெளிபப்டுத்தும் என்பதைப் பற்றியும், தோனியின் கேப்டன்சி பண்பு பற்றியும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் (Salman Butt) கருத்து தெரிவித்துள்ளார். அதே வேளையில், டுபிளஸ்ஸி மற்றும் இயான் மோர்கனின் கேப்டன்சி பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி பேசிய சல்மான் பட், 'டுபிளஸ்ஸி ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஆனால், அவர் ஒரு நல்ல கேப்டன் கிடையாது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பையின் போது, அவர் எடுத்த முடிவுகள் சிறந்ததாக இல்லை. பந்து வீச்சாளர்கள் சொதப்பும் போது, கேப்டன்களிடம் சிறந்த திட்டங்கள் இல்லை என்பதையே அது காட்டுகிறது.
ஆனால், சிறந்த வியூகம் அமைக்கும் ஒரு கேப்டனாக நிச்சயம் தோனியைக் கூறலாம். அதே போல, ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் வியூகத்தையும் குறிப்பிடலாம்.
தற்போதைய கேப்டன்களில், இயான் மோர்கன் சிறந்த வியூகங்களைக் கொண்ட ஒரு கேப்டனாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், அவர் எப்போதும் எதிரணியினர் நிர்ணயிக்கும் 300 - 350 ரன்களை விரட்டத் தான் தயாராகவுள்ளார். மாறாக, எதிரணியினரின் ஸ்கோரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கான போதிய திட்டங்களை மோர்கன் வகுக்கவில்லை' என சல்மான் பட் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்