Udanprape others

VIDEO: ‘தல’ தோனி இப்படி மிஸ் பண்ணுவார்ன்னு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. மொத்த டீமும் ‘செம’ ஷாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயரின் கேட்சை தோனி தவறவிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

VIDEO: ‘தல’ தோனி இப்படி மிஸ் பண்ணுவார்ன்னு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. மொத்த டீமும் ‘செம’ ஷாக்..!

தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் இயான் மோர்கன் (Eoin Morgan) தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபில் தொடரின் இறுதிப்போட்டி இன்று (15.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Dhoni dropped Venkatesh Iyer's catch in IPL 2021 final

இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டு பிளசிஸ் 86 ரன்களும், மொயின் அலி 37 ரன்களும் எடுத்தனர். அதேபோல் ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 27 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர்.

Dhoni dropped Venkatesh Iyer's catch in IPL 2021 final

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் 2 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Dhoni dropped Venkatesh Iyer's catch in IPL 2021 final

இதனை அடுத்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer) களமிறங்கினர். இந்த கூட்டணி ஆரம்பமே அடித்து ஆட முயன்றது. அப்போது ஜோஸ் ஹசில்வுட் 2-வது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் அடித்த பந்து எட்ஜ்சாகி விக்கெட் கீப்பரிடம் சென்றது.

ஆனால் விக்கெட் கீப்பர் தோனி அந்த கேட்சை தவறவிட்டார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்விளைவாக வெங்கடேஷ் ஐயர் அரைசதம் (50 ரன்கள்) அடித்து மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்