'அவர் களத்துல இருக்காருன்னு ரொம்ப நம்புனோம்'...'பிரச்சனை வந்தது இங்க தான்'... மனம்திறந்த பிரபலம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பல விஷயங்கள் குறித்து ’தி இந்து’ நாளிதழுக்கு மனம் திறந்து பேசியுள்ளார்.

'அவர் களத்துல இருக்காருன்னு ரொம்ப நம்புனோம்'...'பிரச்சனை வந்தது இங்க தான்'... மனம்திறந்த பிரபலம்!

அவர் அளித்துள்ள பேட்டியில் ''உலகக்கோப்பையில் இந்திய அணி வலுவான அணியாகவே திகழ்ந்தது. நியூசிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டி மறுநாளுக்குத் தள்ளிப் போனதே பிரச்சனைக்கு காரணமாக அமைந்து விட்டது. மறுநாள் பிட்ச்-சின் தன்மை மாறிவிட்டது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறிவிட்டது. தோனியை தெடர்ந்து விமர்சிப்பது ஆச்சரியமளிக்கிறது.

அவர் இந்திய அணிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் பல இக்கட்டான தருணங்களில், கேப்டன் விராட் கோலிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அரையிறுதிப் போட்டியில் தோனி களத்தில் இருந்தது எங்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. அவர் நிச்சயம் வெற்றியுடன் தான் திரும்புவார் என ஆவலாக இருந்தோம். அவர் தனது அதிரடியை தொடங்குவதற்காக தன்னை தயார்படுத்தியதை காண முடிந்தது. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, ரன் அவுட் நடந்துவிட்டது.

கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். கேப்டன் கோலிக்கும் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் பிரச்சனை என்பது போன்ற செய்திகளில்உண்மை இல்லை. இருவருக்கும் நல்ல ஒத்துழைப்பு இருக்கிறது'' என பரத் அருண் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

MSDHONI, ICCWORLDCUP2019, WORLDCUPINENGLAND, ICCWORLDCUP, VIRATKOHLI, BHARAT ARUN, NEW ZEALAND, SEMIFINAL