அன்றே கணித்த தோனி.. 2012 ல் ஜடேஜா பத்தி சொன்னது இன்னைக்கு பலிச்சுடுச்சு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆட்டநாயகன் ஜடேஜா:
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி 20 தொடரை முழுவதுமாக இழந்துவிட்டு இப்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலி மைதானத்தில் நான்காம் தேதி துவங்கியது. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் சேர்த்தும், பவுலிங்கில் 9 விக்கெட்கள் சாய்த்தும் அசத்தினார். இதையடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பேட்டிங் பவுலிங் கலக்கல் ஜட்டு:
இந்த போட்டியில் ஏழாவது வீரராகக் களமிறங்கிய ஜடேஜா ஆரம்பம் முதலே இலங்கை அணி பந்துவீச்சாளர்களை அதிரடியாகக் கையாண்டார். சதமடித்த பின்னர் மேலும் அதிரடியைக் கூட்டிய அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் சேர்த்தார். இதில் 17 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். 7 ஆவது இடத்தில் இறங்கி இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் கபில்தேவ் அந்த இடத்தில் இறங்கி 163 ரன்கள் சேர்த்ததே அதிகமாகும். பேட்டிங்கில் இப்படி சாதனைப் படைத்த ஜடேஜா பவுலிங்கிலும் இலங்கை வீரர்களை திக்கு முக்காட வைத்தார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. மொஹாலியில் நடக்கும் போட்டிகளில் அவர் மொத்தம் மூன்று முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார்.
அன்றே கணித்த தோனி:
இன்று இந்திய அணிக்கு மூன்று வடிவங்களிலும் அசைக்க முடியாத தூணாக ஆல்ரவுண்டர் ஜடேஜா செயல்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்த முதல் போட்டியிலேயே சாதனைப் படைத்து கலக்கியுள்ளார். இந்நிலையில் ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான போது முதல் போட்டியிலேயே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சொத்தாக இருப்பார் என்று கூறியுள்ளது பரவி வருகிறது.
2012 ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா அறிமுகமானார், அந்த போட்டி ட்ரா ஆன நிலையில் அப்போதைய கேப்டன் தோனி ‘ஜடேஜாவின் பேட்டிங் திறமையை வளர்த்துக்கொள்ள உதவ வேண்டும். எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயனுள்ள ஆல்ரவுண்டராக இருப்பார். இந்திய அணியின் சொத்தாக இருப்பார்’ எனக் கூறியுள்ளார். மொஹாலி போட்டியில் ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றுள்ள நிலையில் தோனியின் அந்த கமெண்ட்டை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சீண்ட பார்த்த இளம் பாகிஸ்தான் வீரர்.. "அங்கிட்டு போங்க தம்பி.." செம கூலாக வார்னர் கொடுத்த பதிலடி..
மற்ற செய்திகள்