"போய் அடுத்த வேலைய பாருங்க 'தம்பி'.." 'சிஎஸ்கே' வீரரை ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த 'தோனி'.. 'வைரலாகும்' வீடியோ!.. நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசனின் எட்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதின.

"போய் அடுத்த வேலைய பாருங்க 'தம்பி'.." 'சிஎஸ்கே' வீரரை ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த 'தோனி'.. 'வைரலாகும்' வீடியோ!.. நடந்தது என்ன??

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, சென்னை பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது. 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி, 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்து, 6 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனில் தங்களது வெற்றிக் கணக்கை ஆரம்பித்துள்ளது.

சென்னை அணி தரப்பில் , தீபக் சாஹர் (Deepak Chahar) சிறப்பாக பந்து வீசி, 4 விக்கெட்டுகளை அள்ளியிருந்தார். முன்னதாக, பஞ்சாப் 19 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த போது, அந்த அணி வீரர் ஷாருக்கான் களத்தில் இருந்தார். அப்போது தீபக் சாஹர் வீசிய பந்து, எல்.பி.டபுள்யூ என்பது போல தெரிந்தது. உடனடியாக, கத்திக் கொண்டே, நடுவரை நோக்கி அவுட் என்பது போல சாஹர் கத்தினார்.

நடுவர் அவுட் கொடுக்காத நிலையில், கேப்டன் தோனியைப் பார்த்து, டிஆர்எஸ் செய்ய வலியுறுத்துவது போல, உற்சாகத்தில் கத்தினார் சாஹர். ஆனால், இதனைக் கண்டு சற்றும் அசராத தோனி, சாஹரிடம் போய் அடுத்த பந்தை வீசு என்பது போல சைகை காட்டினார். தொடர்ந்து, ரிப்ளேயிலும் அவுட்டில்லை என்பது தெரிந்தது.

டிஆர்எஸ் முறை அறிமுகமானது முதல், இதனை வேணுமா வேண்டாமா என்பதை தேர்ந்தெடுப்பதில் தோனியை விட கெட்டிக்காரர் யாருமில்லை என ஒரு பேச்சுண்டு. அதனை நிரூபிக்கும் வகையில், இன்றைய போட்டியில், தீபக் சாஹர், அவுட்டாக தான் இருக்கும் என உறுதியுடன் கூறிய விக்கெட், தோனி வேண்டாம் என்று நக்கலாக கூறியது போலவே, அவுட்டில்லை என்பது பின் சரிவர தெரிந்தது.

 

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்