“இந்த தப்பை மட்டும் பண்ணாம இருந்திருந்தா..!” தோல்விக்கு பின் அடுக்கடுக்கான காரணங்களை சொன்ன தோனி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

“இந்த தப்பை மட்டும் பண்ணாம இருந்திருந்தா..!” தோல்விக்கு பின் அடுக்கடுக்கான காரணங்களை சொன்ன தோனி..!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் மிடில் ஆர்டர், பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் தந்தனர். கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் தோனி களத்தில் இருந்தார். அதனால் சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தோனி 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.

Dhoni blames CSK batsmanship for loss against RCB in IPL 2022

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, ‘பந்துவீச்சு திருப்திகரமாக இருந்தது. 170 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். இரண்டாவது பேட்டிங் செய்யும்போது, மைதானம் அதிகளவில் ஒத்துழைப்பு தரும் என்று எண்ணியிருந்தேன். தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், மிடில் வரிசையில் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி, அடுத்தடுத்து விக்கெட்களை விட்டுக்கொடுத்ததுதான் தோல்விக்கான முக்கிய காரணமாக பார்க்கிறேன்.

வெற்றிக்கு எவ்வளவு ரன்கள் தேவை என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் ஷாட்களை ஆடியிருக்க வேண்டும். ஆனால் இப்போட்டியில் அப்படி செய்யவில்லை. விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடி இருந்தால், இறுதியில் இவ்வளவு ரன்களை அடிக்க வேண்டிய நிலை வந்திருக்காது. தவறுகளையும், குறைகளையும் சரி செய்தாலே வெற்றி கிடைக்கும். வெற்றி பெற்றால் புள்ளி பட்டியல் அதன் பணியை செய்யும்’ என தோனி கூறினார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

CSK, RCB, MSDHONI, IPL, RCBVCSK

மற்ற செய்திகள்