முதல்ல ‘பாண்ட்யாவை’ எடுக்குற ஐடியாவே இல்லை.. ஆனா அந்த ஒருத்தரோட ‘சிபாரிசு’ தான் அவர் டீம்ல இருக்க காரணம்..? வெளியான பரபர பின்னணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை டி20 உலகக்கோப்பை அணியில் சேர்த்ததற்கு முன்னாள் வீரரின் சிபாரிசுதான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (31.10.2021) நியூஸிலாந்தை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. அதனால் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு (Hardik Pandya) பதிலாக இளம் வீரர் ஷர்துல் தாகூரை (Shardul Thakur) அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு காரணம், கடந்த 2018-ம் ஆண்டு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு பாண்ட்யா அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பிறகு அவர் அதிகமாக பவுலிங் செய்யவில்லை. நடந்த முடிந்த ஐபிஎல் தொடரிலும் ஒரு ஓவர் கூட பாண்ட்யா வீசவில்லை.
இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் பவுலிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங் செய்தபோது பாண்ட்யாவுக்கு தோள்ப்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் அப்போட்டியிலும் அவர் பவுலிங் செய்யவில்லை. டி20 உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடரில், 6-வதாக ஒரு பவுலர் இருப்பது அணிக்கு கூடுதல் பலம் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் பாண்ட்யா தொடர்ந்து பவுலிங் செய்யாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிசிசிஐ அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது ஹர்திக் பாண்ட்யா குறித்து பேசிய அவர், ‘ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்யாததால், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவரை சேர்க்க வேண்டாம் என தேர்வாளர்கள் முடிவு செய்தனர். அப்போது தோனியின் (Dhoni) பரிந்துரையின் காரணமாகதான் அவருக்கு அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைத்தது. ஹர்திக் பாண்ட்யா நல்ல ஃபினிஷர் என்பதால் அவர் அணியில் இருக்க வேண்டும் என தோனி விரும்பினார்’ என அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பிசிசிஐ அதிகாரி, ‘6 மாதங்களாகவே ஹர்திக் பாண்ட்யாவின் உடற்தகுதி கேள்விக்குறியாகவே உள்ளது. அப்படி இருக்கையில் அவருக்கு மறுபடியும் தோள்ப்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக நல்ல உடற்தகுதியில் உள்ள வீரரை விளையாட வைக்கலாம். பாண்ட்யாவால் நன்றாக விளையாடும் மற்றொரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது’ என அவர் தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக (Mentor) நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்