'விலைமதிக்க முடியாத, தோனியின் அனுபவம்.. ரோஹித்தின் கேப்டன்ஷிப் .. அதனால’.. கோலி அதிரடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தயார் படுத்துவதில் முக்கிய பொறுப்புகளில் தோனியும், ரோஹித்தும் அமர்த்தப்படவுள்ளதாக கோலி கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆரவாரத்தை உண்டுபண்ணியுள்ளது.

'விலைமதிக்க முடியாத, தோனியின் அனுபவம்.. ரோஹித்தின் கேப்டன்ஷிப் .. அதனால’.. கோலி அதிரடி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக விளையாண்ட தோனியின் அனுபவமும், மும்பை அணிக்காக விளையாண்ட ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப்பும் சிறப்பாக இருந்தமையால், இவர்களின் இந்த உத்திகளை வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் நிச்சயம் பயன்படுத்தவுள்ளதாக, இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கோலி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கோலி, ‘ஐபிஎல் போட்டிகளில் தோனியின் விக்கெட் கீப்பிங் திடீரென ஆட்டத்தையே மாற்றக் கூடிய அளவில் இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. என் உட்பட பலரும் தோனியை நெருக்கமாக அவதானித்து வரும் சூழலில், விலைமதிக்க முடியாத அவரது அனுபவச் செல்வத்தால்தான் என்னால் சுதந்திரமாக இருக்க முடிந்தது’ என்று கூறியதோடு, தனது கிரிக்கெட் வாழ்க்கை தோனிக்கு கீழ்தான் தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், தோனி மற்றும் ரோஹித் இருவரின் கேப்டன்ஷிப்பும், உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தயார் படுத்துவதற்கான தலைமைப் பணிகளில் இருக்க வேண்டும் என்று விரும்புவதால், அதற்காக விரைவில் தொடங்கப்படவிருக்கும் உலகக்கோப்பை உத்தி வகுப்புக்குழுவில் இருவரும் (தோனி, ரோஹித்) முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படவுள்ளதாக கோலி அறிவித்துள்ளார்.