"தோனி சொன்னது நடந்துரும் போலயே".. மீண்டும் நடக்கும் 2011 WC மேஜிக்?.. "அப்போ இந்தியாவுக்கு தான் கப்பா?".. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

8 வது டி 20 உலக கோப்பைத் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.

"தோனி சொன்னது நடந்துரும் போலயே".. மீண்டும் நடக்கும் 2011 WC மேஜிக்?.. "அப்போ இந்தியாவுக்கு தான் கப்பா?".. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!

முதல் சுற்றில் இருந்து இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது.

தொடர்ந்து, தற்போது சூப்பர் 12 சுற்றுகளும் அமோகமாக நடைபெற்று வருகிறது. அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஒவ்வொரு போட்டியும் இந்த சுற்றில் முக்கியம் வாய்ந்தது என்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றனர்.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, இதுவரை ஒரு போட்டியில் விளையாடி உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த இந்த போட்டியில், கடைசி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி வரை களத்தில் நின்று அதிரடி காட்டிய கோலியையும் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி இருந்தனர்.

dhoni about india winning t20 wc fans connected with incidents

டி 20 உலக கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும் இந்தியா இருப்பதால், கோப்பையை கைப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனிடையே, இந்திய அணி இந்த முறையை கோப்பையை கைப்பற்றும் என்பதற்கு சான்றாக சில விஷயங்களை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Oreo பிஸ்கட் நிறுவனத்தின் புதிய Cookies ஒன்றை டி 20 உலக கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்தியாவில் Launch செய்து வைத்தார் தோனி. அது மட்டுமில்லாமல், உடன் வேறொரு தகவலையும் தோனி பகிர்ந்து கொண்டார். 2011 ஆம் ஆண்டு, Oreo பிஸ்கட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அப்போது, இந்திய அணி உலக கோப்பையை வென்றிருந்தது. அதே போல, இந்த ஆண்டு மீண்டும் Oreo Cookies இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதனால், இந்திய அணி டி 20 உலக கோப்பையை கைப்பற்றும் என்றும் தோனி குறிப்பிட்டிருந்தார்.

dhoni about india winning t20 wc fans connected with incidents

அந்த சமயத்தில், இது பற்றி ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டிருந்தனர். ஆனால், தற்போது தோனி சொன்னது நடந்து விடும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம், 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது, Oreo பிஸ்கட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இன்னொரு சம்பவமும் உள்ளது.

2011 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை சிறிய அணியான அயர்லாந்து வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தது. அதே போல, இந்த முறையும் டி 20 உலக கோப்பைத் தொடரில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது அயர்லாந்து அணி.

dhoni about india winning t20 wc fans connected with incidents

Oreo பிஸ்கட் அறிமுகம் மற்றும் அயர்லாந்து இங்கிலாந்து அணியை வீழ்த்தியது என இரண்டு சம்பவங்கள், 2011 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடந்துள்ளதால் ஒருவேளை தோனி கூறியது போல இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா என்ற ஆவலிலும் ரசிகர்கள் இந்த விஷயத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

MSDHONI, ROHIT SHARMA, VIRATKOHLI, T20 WORLD CUP, ENG VS IRE

மற்ற செய்திகள்