VIDEO: வேறலெவல்ல விளையாடிட்டு இருந்த மனுசன்.. கடைசியில் ‘இப்டி’ அவுட் ஆவோம்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்க மாட்டாரு.. உடைஞ்சு போன வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் வித்தியாசமாக அவுட்டான வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

VIDEO: வேறலெவல்ல விளையாடிட்டு இருந்த மனுசன்.. கடைசியில் ‘இப்டி’ அவுட் ஆவோம்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்க மாட்டாரு.. உடைஞ்சு போன வீரர்..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்களை எடுத்துள்ளது.

Dhananjaya de Silva gets dismissed hit-wicket against West Indies

அதிகபட்சமாக கேப்டன் கருணாரத்னே 147 ரன்களும், தனஞ்சய டி சில்வா 61 ரன்களும், பாத்தும் நிஸ்ஸங்கா 56 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளும், வாரிக்கன் 3 விக்கெட்டுகளும், கேப்ரியல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

Dhananjaya de Silva gets dismissed hit-wicket against West Indies

இந்த நிலையில், இலங்கை அணியின் பேட்ஸ்மேன் தனஞ்சய டி சில்வா அவுட்டான வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அதில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேப்ரியல் வீசிய 95-வது ஓவரின் 5-வது பந்தை தனஞ்சய டி சில்வா எதிர்கொண்டார். பவுன்சராக வந்த அந்த பந்தை அவர் அடிக்காமல் தடுக்க மட்டும் செய்தார்.

அப்போது பந்து நேராக ஸ்டம்புக்கு மேல் விழுவது போல் சென்றது. உடனே அதை தட்டிவிட தனஞ்சய டி சில்வா முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது பேட் ஸ்டம்ப் மீது பட்டது. இதனால் ஹிட் அவுட் முறையில் தனஞ்சய டி சில்வா வெளியேறினார். இதுபோல் சமீபத்தில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் ஹர்சல் படேல் ஹிட் அவுட்டாகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

SLVWI, DHANANJAYA, HITWICKET

மற்ற செய்திகள்