சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய மற்றொரு வீரர்??.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.. "எப்போ திரும்பி வருவாரு??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரை கைப்பற்றி அசத்தி இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அத்துடன் சேர்த்து நான்கு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறையும் அதிக பலத்துடன் விளங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், இந்த முறை சிஎஸ்கே ஆடியுள்ள ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போட்டி..
முதல் நான்கு லீக் போட்டிகளில், தோல்வி அடைந்திருந்த சென்னை அணி, பெங்களூர் அணிக்கு எதிரான ஐந்தாவது லீக் போட்டியில், தங்களின் வெற்றிக் கணக்கை தொடங்கி இருந்தது. தொடர்ந்து, ஆறாவது லீக் போட்டியில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், மீண்டும் தோல்வி அடைந்திருந்தது சிஎஸ்கே. இதனையடுத்து, தங்களின் 7 ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை நாளை (21.04.2022) சந்திக்கவுள்ளது.
சென்னை அணிக்கு பலத்த அடி
சென்னை அணி தொடர்ந்து தங்களின் அனுபவமில்லாத பந்து வீச்சின் காரணமாக தான் தோல்வி அடைந்து வருகிறது என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் ஏலத்தில், 14 கோடி ரூபாய் கொடுத்து, தீபக் சாஹரை சென்னை அணி எடுத்திருந்தது. ஆனால், அவரோ காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் விலகி விட்டார். ஐபிஎல் தொடரின் பாதியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழு ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது.
தீபக் சாஹர் இல்லாமல் போனது, சென்னை அணிக்கு பலத்த அடியாக அமைந்து விட்டது. இந்நிலையில், தற்போது மற்றும் ஒரு வீரர் சென்னை அணியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நியூசிலாந்து அணி வீரரான டெவான் கான்வேயை சென்னை அணி இந்த முறை ஏலத்தில் எடுத்திருந்தது. இதுவரை சிஎஸ்கே அணி ஆடியுள்ள ஆறு போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டுமே கான்வேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
விலகிய மற்றொரு வீரர்?
சமீபத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக டெவான் கான்வேவிற்கு 'Pre Wedding' நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டிருந்தது. தமிழ் கலாச்சாரப்படி, டெவான் கான்வே வேஷ்டி சட்டையில் இருக்க, அவரது வருங்கால மனைவி கிம் வாட்சன் புடவை உடுத்தி இருந்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சென்னை வீரர்கள் அனைவரும், வேஷ்டி உடுத்திய படி தான் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, தனது திருமணத்திற்கு வேண்டி, டெவான் கான்வே சொந்த ஊரான நியூசிலாந்துக்கு கிளம்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், அடுத்த ஒரு வாரத்திற்கு மேல் கான்வே எந்த போட்டிகளிலும் களமிறங்க மாட்டார் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றது. அப்படி பார்க்கும் போது, சென்னை அணியின் இரண்டு போட்டிகளில் அவர் இந்தியாவில் இருக்கமாட்டார் எனவும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்