இப்படி அவசரப்பட்டு 'கைய' உடைச்சிட்டீங்களே...! கொஞ்சம் 'கோவத்த' கண்ட்ரோல் பண்ணுங்க பாஸ்...' கடைசி நேரத்துல 'இப்படியா' ஆகணும்...? - நியூசிலாந்து அணிக்கு இது பெரிய அடி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயம் காரணமாக நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே உலகக்கோப்பை டி-20 தொடரின் இறுதிப்போட்டி மற்றும் இந்தியச் சுற்றுப்பயணத்திலிருந்தும் விலகியுள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் டி-20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதி போட்டிக்கு தயாராகி வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் டெவோன் கான்வே 38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்நிலையில் அவர் கான்வே. முதல் அரையிறுதி ஆட்டத்தில் 46 ரன்களில் ஆட்டமிழந்த காரணத்தால் கோவத்தால் தனது இடது கையை பேட்டில் ஓங்கிக் குத்தினார்.
இதன்காரணமாக துரதிர்ஷ்டவசமாக டெவோன் கான்வேக்கு கையில் எலும்புமுறிவு ஏற்பட்டது. எலும்புமுறிவு காரணமாக டெவோன் உலகக்கோப்பை இறுதிச்சுற்றில் மட்டுமல்லாமல் இந்தியச் சுற்றுப்பயணத்தில் இருந்தும் விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்