'ஐபிஎல் தொடர் வரலாற்றில்'... 'மிக மோசமான சாதனை படைத்த'... 'டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி'... 'மனமுடைந்த ரிக்கி பாண்டிங்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் டெல்லி அணி வீரர்கள் மிக மோசமான தொடக்கத்தை கொடுத்தது, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

'ஐபிஎல் தொடர் வரலாற்றில்'... 'மிக மோசமான சாதனை படைத்த'... 'டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி'... 'மனமுடைந்த ரிக்கி பாண்டிங்'!

கொரோனாவால் ரசிகர்கள் இன்றி இந்த ஆண்டு ஐபிஎல் 13-வது சீசன், ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 56 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றன.

இந்த பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி நேற்றிரவு துபாயில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதியது. மும்பை அணியில் 3 மாற்றமாக ஓய்வில் இருந்த பும்ரா, டிரென்ட் பவுல்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் திரும்பினர்.

Delhi Capitals record worst ever start in IPL history

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி அணியின் முதல் 3 வீரர்களான பிருத்வி ஷா, ரகானே மற்றும் தவான் ஆகியோர் அடுத்தடுத்து டக் டவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

1.2 ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்காமல், 3 விக்கெட்டுகள் பறிபோனதால், அந்த அணியினர் மிரண்டு போயினர். இவர்கள் மூவருமே இந்த ஐபிஎல் தொடரில் தங்களின் மிக மோசமான பகுதியையும், சிறப்பான பகுதியையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் 13 வருட ஐபிஎல் வரலாற்றில் இது மிக மோசமான தொடக்க சாதனை ஆகும். இதற்கு முன்னதாக 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, சென்னை அணிக்கு எதிராக விளையாடியபோதும், 2011-ல் கொச்சி டஸ்க்கர்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியபோதும் தேவையற்ற மோசமான சாதனைகள் படைத்தனர்.

Delhi Capitals record worst ever start in IPL history

இவ்விரு அணிகளும் 1 ரன்னுக்கு 3 தொடக்க விக்கெட்டுகளை படிக்கொடுத்திருந்தன. ஆனால், தற்போது 0 ரன்னுக்கு 3 விக்கெட்டுக்கள் பறிபோனது மோசமான சாதனையாக பார்க்கப்படுகிறது. மோசமான பார்மில் இருந்த மூவருக்கும் ரிக்கி பாண்டிங், நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்தார். எனினும் தொடர்ந்து டக் அவுட்டால் அந்த அணியின் பயிற்சியாளர்  ரிக்கி பாண்டிங் ஏமாற்றமடைந்து மனமுடைந்துள்ளார்.

மற்ற செய்திகள்