'தோனி' சொன்ன அந்த 'ரெண்டு' வார்த்தை... இதுக்குத் தான் 'தல' இவ்ளோ நாள் நாங்க வெயிட்டிங்.." 'ட்விட்டர்' டிரெண்டிங்கில் தூள் கிளப்பிய 'சிஎஸ்கே' 'ரசிகர்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றியுள்ள நிலையில், லீக் தொடரின் தங்களது கடைசி போட்டியில் இன்று பஞ்சாப் அணியை எதிர்கொண்டு வருகிறது.

'தோனி' சொன்ன அந்த 'ரெண்டு' வார்த்தை... இதுக்குத் தான் 'தல' இவ்ளோ நாள் நாங்க வெயிட்டிங்.." 'ட்விட்டர்' டிரெண்டிங்கில் தூள் கிளப்பிய 'சிஎஸ்கே' 'ரசிகர்'கள்!!!

முன்னதாக, இந்த போட்டிக்கான டாஸ் சமயத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அப்போது சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் ஐபிஎல் தொடரில் நீங்கள் கடைசியாக ஆடும் போட்டி இது தானா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தோனி, 'நிச்சயமாக இல்லை (Definitely Not)' என தெரிவித்திருந்தார்.

முன்னதாக, இந்த சீசனில் சென்னை மோசமான பார்மில் உள்ளதும், தோனி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாதும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அது மட்டுமில்லாமல், எதிரணி வீரர்களுக்கு தன்னுடைய ஜெர்சியை வழங்குவதை தோனி வழக்கமாக கொண்டிருந்தார். இதனால், தோனி சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றது போல, ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகப் போகிறார் என ரசிகர்கள் கலக்கமடைந்தனர்.

ஆனால், தோனியின் இன்றைய பதில் சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு . இதன் காரணமாக, இந்திய அளவில் #DefinitelyNot என்ற தோனி சொன்ன அந்த வார்த்தை, இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இது தொடர்பாக பல மீம்ஸ்களையும் தோனி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

 

அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணி மீண்டு வந்து தோனி தலைமையில் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டிச் செல்லும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

  •  

மற்ற செய்திகள்