'இவர போலவே அவரும்'.. 'சும்மா தெறிக்க விட்றாப்டி'.. கோலி புகழ்ந்த அந்த வீரர் யாரு தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் மோதிய இந்திய அணி, 3-0 என்கிற கணக்கில் அந்த அணியை ஒயிட் வாஷ் செய்தது. இதில் தீபக் சாஹர், தனது அட்டகாசமான பந்துவீச்சினால், தொடக்கத்திலேயே, குறைந்த ரன்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தீபக் சாஹரின் பந்துவீச்சில் சுருண்டுபோன மேற்கு இந்தியத் தீவுகள் அணியால், 200 ரன் பிட்சில் 146 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டிகளின் பந்துவீச்சைப் பற்றி பேசினார்.
குறிப்பாக தீபக் சாஹரின் பந்துவீச்சை கோலி புகழ்ந்து பேசினார். அதன்படி புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சுடன் தீபக் சாஹரை ஒப்பிட முடிவதாகவும், இருவரும் ஒன்று போலவே பந்துவீசுவதாகவும் கூறியுள்ளார். புவனேஷ்வர் குமார் ஒரு தொழில்நேர்த்தி பவுலராகவும், அதே சமயம் தீபக் சஹார் பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுகிறார் என்றும் புகழ்ந்துள்ளார். புதிய பந்தில் அவர் பின்னியெடுக்கிறார், ஸ்விங்தான் இவரது பலம், ஐபிஎல் போட்டியிலும் இதுதான் உதவியது என்றும் கோலி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணிகள் வலுவானதாக இருப்பதை நினைவில் கூர்ந்து விளையாடவேண்டும் என்றும், ரிஷப் பந்த், இதேபோல் மேட்சை ஃபினிஷ் செய்து கொடுத்தாரென்றால், அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்றும், அணியும் இன்னும் வலுப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.