VIDEO: எங்ககிட்டயேவா..! நியூஸிலாந்து வீரர் கொடுத்ததை அப்படியே திருப்பிக் கொடுத்த தீபக் சஹார்.. வெறித்தனமான வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிக்களுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மார்ட்டின் கப்தில் 70 ரன்களும், மார்க் சாப்மேன் 63 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை அஸ்வின் மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 62 ரன்களும், ரோஹித் ஷர்மா 48 ரன்களும் எடுத்தனர். நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளும், டிம் சவுத்தி, மிட்செல் சான்ட்னர் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரும், நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் ஒருவருக்கொருவர் முறைத்துப் பார்த்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், போட்டியின் 18-வது ஓவரை தீபக் சஹார் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தையே மார்ட்டின் கப்தில் சிக்சருக்கு விளாசினார். அப்போது பந்து சென்ற திசையைப் பார்க்காமல் தீபக் சஹாரை மார்டின் கப்தில் முறைத்துப் பார்த்தார்.
Deepak chahar is known for this 👀pic.twitter.com/TyZMPrD9pY
— VIVO IPL 2022 | Wear a Mask 😷 (@IPL2022_) November 17, 2021
இதனை அடுத்து, அந்த ஓவரின் இரண்டாவது பந்தையும் மார்டின் கப்தில் சிக்சர் விளாச முயன்றார். ஆனால் அதை ஸ்ரேயாஸ் ஐயர் கேட்ச் பிடித்து அவுட் செய்துவிட்டார். உடனே பழிக்குப்பழியாக தீபக் சஹார், மார்ட்டின் கப்திலை முறைத்துப் பார்த்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்