நம்ம சாஹர்..7 ரன்னுக்கு '6 விக்கெட்' எடுத்தது.. கொஞ்சூண்டு 'மண்ணை' வச்சு தானாம்.. 'உடைந்த' ரகசியம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இளம் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் மற்றும் சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த பந்துவீச்சு என்ற இரண்டு சாதனைகளை தீபக் படைத்தார்.

நம்ம சாஹர்..7 ரன்னுக்கு '6 விக்கெட்' எடுத்தது.. கொஞ்சூண்டு 'மண்ணை' வச்சு தானாம்.. 'உடைந்த' ரகசியம்!

இந்தநிலையில் தனது வெற்றி ரகசியம் குறித்து அவர் போட்டிக்குப்பின் சாஹல் எடுத்த இண்டர்வியூவில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், '' இதுபோல விக்கெட் வீழ்த்துவேன் என கனவிலும் நினைக்கவில்லை. சென்னை அணிக்காக பந்து வீசியபோது கைகள் உலர்ந்து விடாமல் இருக்க கொஞ்சம் மண்ணை எடுத்து கைகளில் பரபரவென தேய்த்து கொள்வேன். அது கைகளில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதற்கு உதவும். மேலும் பந்தும் கையை விட்டு நழுவிச்செல்லாது. சிஎஸ்கே அணிக்காக கற்றுக் கொண்டது இங்கே உதவி செய்தது,'' என்றார்.

இரவு நேரங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், கைகளை விட்டு பந்து நழுவி செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதற்காக தான் சாஹர் கைகளில் மண்ணை தேய்த்து கொள்ளும் வழக்கத்தை கற்று வைத்திருக்கிறார்.