"'டீம்'ல உள்ள சிலருக்கு கொரோனா 'பாசிட்டிவ்'ன்னு சொன்னாங்க.. அந்த சமயத்துல நாங்க பண்ணது இதான்.." 'சிஎஸ்கே'வில் நடந்தது என்ன??.. 'தீபக் சாஹர்' பகிர்ந்த 'விஷயம்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில், கொரோனா வைரசின் இரண்டாம் அலை, மிகவும் வேகமாக பரவி, ஒட்டுமொத்த இந்தியாவையும் மோசமாக அச்சுறுத்தி வருகிறது.

"'டீம்'ல உள்ள சிலருக்கு கொரோனா 'பாசிட்டிவ்'ன்னு சொன்னாங்க.. அந்த சமயத்துல நாங்க பண்ணது இதான்.." 'சிஎஸ்கே'வில் நடந்தது என்ன??.. 'தீபக் சாஹர்' பகிர்ந்த 'விஷயம்'!!

ஒரு நாளைக்கு 4 லட்சம் பேர் வரை, பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகம் நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி முதல், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற்றுவந்தது வந்தது.

பயோ பபுள் விதிகளுக்கு உட்பட்டு, வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் ஆடி வந்த போதும், கொல்கத்தா அணியைச் சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது முதலில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து, சென்னை, டெல்லி மற்றும் டெல்லி அணியைச் சேர்ந்தவர்களுக்கும், கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஐபிஎல் போட்டிகளை பாதியிலேயே நிறுத்துவதாக பிசிசிஐ அறிவித்தது. இதன் காரணமாக, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக, தோனி உள்ளிட்ட மற்ற அனைத்து வீரர்களின் நிலை என்ன என்பது பற்றி, ரசிகர்கள் மத்தியில் பதற்றம் நிலவியது.

தொடர்ந்து, சோதனைக்கு பின்னர், வேறு யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியான நிலையில், இது பற்றி பேசியுள்ள சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் (Deepak Chahar), 'அணியில் சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்ததுமே, எங்களை தனிமைப்படுத்திக் கொள்ள, அணி நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன் பிறகு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகடிவ் என முடிவுகள் வந்ததும் தான், அனைவரும் நிம்மதி அடைந்தோம்.

அணியிலுள்ளவர்களுக்கு பாசிட்டிவ் என வந்ததும், மற்றவர்கள் யாரும் பதற்றப்படவில்லை. ஒவ்வொருவரும் அந்த நிலைமையை சிறப்பாக கையாண்டனர். அணியிலுள்ள யாருமே பயோ பபுள் விதிகளை மீறவில்லை. மிகவும் கண்டிப்புடன் விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. இருந்த போதும், எங்கு தவறு நடந்தது என்பது தெரியவில்லை.

இது சற்று சவாலான விஷயம் தான். எனினும், தற்போதைய நிலைமைக்கு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமான ஒன்று. அதிகப்படியான கஷ்டங்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

அவர்களுக்காக தான் நாங்கள் விளையாடுகிறோம். அவர்களின் ஒரு பொழுது போக்காக, கூட ஐபிஎல் இருந்திருக்கும்' என தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்