அஷ்வின் நீக்கப்பட்டது சரியா? தவறா?.. தொடரும் சர்ச்சை... எரிச்சல் அடைந்து... விளாசித் தள்ளிய டிவில்லியர்ஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் அஷ்வினை ஏன் சேர்க்கவில்லை என்ற சர்ச்சையில் தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அஷ்வின் நீக்கப்பட்டது சரியா? தவறா?.. தொடரும் சர்ச்சை... எரிச்சல் அடைந்து... விளாசித் தள்ளிய டிவில்லியர்ஸ்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் 2 - 1 என முன்னிலை பெற்றுள்ளது.  

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது ஒருபுறம் இருந்தாலும், அஷ்வினை ஏன் விலக்கி வைத்தார்கள் என்ற கேள்வி தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் கடைசியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார்.

அதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 4வது டெஸ்ட் போட்டியில் எப்படியும் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், ஓவல் மைதானத்தில் சுழற்பந்துவீச்சுக்கு அதிக பலன் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், இந்த பிட்ச்சிலும் அஷ்வினுக்கு கேப்டன் விராட் கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். 

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரருமான டிவில்லியர்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள், அணியின் வீரர்கள் தேர்வு குறித்தும், பிற முட்டாள்தனங்கள் குறித்தும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். போட்டியை, உத்வேகத்தை, திறமையை, தேசப்பற்றை ஊக்கப்படுத்துவதைத் தொடங்குங்கள். நல்ல போட்டியை நீங்கள் இழக்கிறீர்கள். 

4வது டெஸ்டில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது, கேப்டன் கோலி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்தார். சில வீரர்களிடம் இருந்து அபார திறமை, துணிச்சல் வெளிப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் ரூட் சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்து வீரர்களும் நன்றாக விளையாடினர். இறுதிப்போட்டிக்காக காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 

 

 

மற்ற செய்திகள்