என்னது இவர் இப்படி பண்ணாரா.. நம்பவே முடியலையே..! தடாலடியாக ப்ளேயிங் 11-ல் இருந்து நீக்கிய தென் ஆப்பிரிக்கா.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் செய்த செயல் உலகளவில் கண்டனங்களை பெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 18-வது லீக் போட்டி இன்று (26.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக எவின் லூயிஸ் 56 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை டுவைன் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளும், கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளும், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில், இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் டி காக் செய்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை போலீஸ் அதிகாரி ஒருவர் கால் முட்டியால் அவரது கழுத்தில் அழுத்தி கொலை செய்தார். இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனால் கால்பந்து, கிரிக்கெட் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின்போது இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கறுப்பினத்தவர் மீது நடக்கும் வன்முறையை கண்டித்து Black Lives Matter (BLM) என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது, இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்துக்கு வெளியே முட்டியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின்போது தென் ஆப்பிரிக்க வீரர்களும் முட்டியிட்டனர். அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் (Quinton de Kock) மட்டும் முட்டியிட மறுத்து நின்றுகொண்டிருந்தார். இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்றைய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் ப்ளேயிங் லெவனில் இருந்து டி காக்கை தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் நிக்கியுள்ளது. இதனை அடுத்து அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ஹென்ட்ரிக் கிளாஸின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Quinton de Kock not playing because of his stand on BLM movement 😳#BlackLivesMatter #SAvsWI #worldT20 pic.twitter.com/LqC76QKCL3
— DK (@DineshKarthik) October 26, 2021
🇿🇦 Cricket South Africa believes success both on the field and beyond the boundary will be guaranteed if all South Africans stand united to build a new innings based on the pillars of inclusivity, access and excellence.
➡️ Full statement: https://t.co/j9MDE1Ct1Z pic.twitter.com/WjRlZ8SmUG
— Cricket South Africa (@OfficialCSA) October 26, 2021
போட்டி தொடங்குவதற்கு முன்பு பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் பங்கேற்க முடியாது என்று டி காக் தெரிவித்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்