‘தோனிக்கு கெடச்ச அந்த பெருமை இப்போ கோலிக்கு கெடச்சுருக்கு’.. அது என்ன தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்துக்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்பட உள்ளது.
பாஜக கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 1999 -ம் ஆண்டு முதல் 2003 -ம் ஆண்டு வரை இருந்துள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள புகழ் பெற்ற மைதானமான பெரோஸ் ஷா கோட்லா மைதானம் தற்போது நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அருண் ஜெட்லியை கவுரவிக்கும் வகையில் இந்த மைதானத்துக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. அதற்கான விழா டெல்லியில் நடைபெற உள்ளது.
அப்போது மைதானத்தில் உள்ள ஒரு கேலரிக்கு விராட் கோலியின் பெயர் சூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விராட் கோலியின் சாதனைகள் குறித்த அனிமேஷன் படம் திரையிடப்பட இருக்கிறது. இந்த விழாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். முன்னதாக ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தின் பெவிலியனுக்கு எம்.எஸ். தோனி பெவிலியன் என்று பெயர் வைத்து கவுரவித்தது குறிப்பிடத்தக்கது
Thank you @delhi_cricket and @BCCI for bestowing this honour upon me. The pavilion will remind me of my journey in life and in cricket but most importantly I hope it will serve as an inspiration for the next generation of young cricketers of our nation.
— Virat Kohli (@imVkohli) September 12, 2019
@delhi_cricket president @RajatSharmaLive on #DDCAAnnualAwards2019: When I decided to name a stand in honour of Virat Kohli, I told this first to Arun Jaitleyji. He told me this is a good decision because there is no better player than Virat in world cricket.
— DDCA (@delhi_cricket) September 12, 2019