RRR Others USA

“யாரும் ரூம் கதவை பூட்டக் கூடாது”.. எனக்கு அந்த ‘ஒரு’ விஷயம் மட்டும் பிடிக்காது.. புள்ளரிக்க வைத்த ரிக்கி பாண்டிங் பேச்சு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல் அணி வீரர்களுக்கு தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

“யாரும் ரூம் கதவை பூட்டக் கூடாது”.. எனக்கு அந்த ‘ஒரு’ விஷயம் மட்டும் பிடிக்காது.. புள்ளரிக்க வைத்த ரிக்கி பாண்டிங் பேச்சு..!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. அதனால் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய வீடியோவை டெல்லி அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், ‘பல புதிய முகங்களை இங்கு பார்க்கிறேன். நீங்கள் சிறந்த வீரர்கள் என்பதனால்தான் டெல்லி அணியில் உள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். முதலில் இது அணி என்பதை மறந்துவிட்டு, குடும்பமாக அடுத்த 2 மாதத்திற்கு ஒன்றாக இருக்கப் போகிறோம். ஒருவரை ஒருவர் பேசி நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

ஹோட்டலில் யாருடைய அறை கதவும் மூடி இருக்கக்கூடாது, திறந்துதான் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்ற வீரர்கள் உங்கள் அறைக்கு வந்து பேச ஏதுவாக இருக்கும். நான் பயிற்சியாளர் என்பதை மறந்து விடுங்கள், உங்களுடைய நண்பன் என நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிரிக்கெட் குறித்து என்ன சந்தேகம் இருந்தாலும் என்னுடன் வந்து பேசுங்கள். அதுதான் என் பணி.

இங்கே டெல்லி அணியின் கேப்டன், சர்வதேச வீரர்கள், தண்ணீர் பாட்டில் தூக்கிக் கொண்டு வரும் வீரர்கள் என அனைவரையும் ஒரே மாதிரி தான் பார்ப்பேன். அதனால் நீங்களும் அப்படித்தான் இருக்கவேண்டும். சீனியர்கள் உங்கள் பயிற்சியை முடித்து விட்டால் ஜூனியர் வீரர்களுக்கும் உதவி செய்யுங்கள்.

பயிற்சியில் 100 சதவீதத்தை கொடுங்கள். ஒரு காரியத்தை 100 சதவீத முயற்சியுடன் செய்தால் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். வீரர்கள் தங்களது நேரத்தையும், திறமையும் வீணடிப்பது எனக்கு சுத்தமாக பிடிக்காது. கிரிக்கெட் விஷயத்தில்தான் நான் கொஞ்சம் சீரியஸானவன், மற்ற நேரத்தில் ஜாலியாகதான் இருப்பேன். குடும்பமாக செயல்பட்டு நிச்சயம் இந்த முறை கோப்பையை வெல்வோம்’ என உணர்ச்சிகரமாக ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

IPL, RICKYPONTING, DELHICAPITALS, IPL2022

மற்ற செய்திகள்