தப்பி தவறிக் கூட ரஸலுக்கு 'அந்த பால்' மட்டும் போடக்கூடாதுன்னு தெளிவா இருந்தோம்...! 'நாங்க மூணு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு தான் போனோம், ஆனால்...' - போட்ட 'ப்ளானை' பகிர்ந்த இளம் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று (29-04-2021) டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அகமதாபாத்தில் ஸ்டேடியத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 120 பந்துகளில் வெறும் 154 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதுகுறித்து கூறிய லலித் யாதவ், 'எங்கள் அணியின் திட்டப்படி அந்த்ரே ரஸலுக்கு அதிக அளவில் சுழற்பந்து வீசக்கூடாது என்று நினைத்தோம். இஷாந்த் சர்மா, ரபடா, அவேஷ் கான் ஆகியோர் மூலம் யார்க்கர் மற்றும் பவுன்சர் வீசி நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என பேசிக்கொண்டோம்' எனக் கூறினார்
ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை மீறி ரஸல் சிறப்பாக ஆடினார். என்னதான் அந்த்ரே ரஸல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், டெல்லி அணி 16.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோரை டெல்லி இளம் வீரர் லலித் யாதவ் வீழ்த்தினார். அந்த்ரே ரஸல் 27 பந்தில் 45 ரன்கள் அடித்தார்.
சிறப்பாக பந்து வீசிய லலி் யாதவ் 3 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின்போது அந்த்ரே ரஸல் சுழற்பந்தை எதிர்கொள்ள விடக்கூடாது என்பதே எங்களது திட்டமாக இருந்தது என லலித் யாதவ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்